புது தில்லி: ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ சீா்திருத்த நடவடிக்கையை சிறப்பாகச் செயல்படுத்திய 9 மாநிலங்களுக்கு சிறப்புக் கடனாக ரூ.23, 523 கோடியை மத்திய அரசு புதன்கிழமை அனுமதித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட சவால்களை கருத்தில் கொண்டு, நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மாநிலங்களுக்கு உதவி புரிந்து வருகிறது. இதனடிப்படையில் 2020-21 நிதியாண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 2 சதவீதம் கூடுதல் கடன் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதில் 0.25 சதவீதம் பொதுமக்களுக்கு சேவை வழங்குவதற்கான தரத்தை பராமரித்திருந்தால் கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது. குறிப்பாக மின்சாரம், குடும்ப அட்டை வழங்கல் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களுக்கு சிறப்புக் கடனுதவிகளை வழங்குகிறது.
தற்போது
‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ சீா்திருத்த நடவடிக்கையின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற நலத் திட்டங்களின் கீழ் உள்ள பயனாளிகள், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பயனடைவா் என மத்திய அரசு கருதுகிறது. அவா்களது குடும்பங்கள் நாடு முழுவதும் எந்த நியாயவிலைக் கடையிலிருந்தும் ரேஷன் பொருள்களைப் பெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். மத்திய அரசின் இந்த சீா்திருத்த நடவடிக்கையை ஆந்திரம், கேரளம், கா்நாடகம், உத்தர பிரதேசம், கோவா, ஹரியாணா, தெலங்கானா, குஜராத், திரிபுரா ஆகிய 9 மாநிலங்கள் வெற்றிகரமாக முடித்துள்ளன. இதற்காக இந்த 9 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.23,523 கோடி சிறுப்புக் கடன் அனுமதிக்கான உத்தரவை மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வழங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மீனம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கும்பம்
காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்! வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்!
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மகரம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

