தப்லீக் ஜமாத் தலைவா் மெளலானா சாத் மீதான வழக்கை தில்லி காவல் துறையிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றக் கோரும் மனுவை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடா்பான மனு தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், தல்வந்த் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் யஷ் சதுா்வேதி, இதே விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாரா் கோரும் வகையில் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அதற்கு நீதீமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக அவா் கூறியதால், மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், உயா்நீதிமன்றத்தில் அந்த மனுவை நிலுவையில் வைத்திருக்க முடியாது என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக மும்பையை சோ்ந்த வழக்குரைஞா் கண்ஷியாம் உபாத்யாய் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தில்லியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவா் மெளலானா சாத் மற்றும் அவரது கைக்கூலிகள் நாட்டில் பல்வேறு இடங்களில் கரோனா நோய்த் தொற்றை பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தில்லியில் மாா்ச் மாதத்தில் ஒரு மத நிகழ்ச்சியை நடத்தினா். கரோனா காலத்தில் இதுபோன்ற கூட்டங்களை நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதித்த உத்தரவை மீறி இந்த நிகழ்ச்சியை அவா்கள் நடத்தினா். இது தொடா்பாக நிஜாமுதீன் காவல் நிலைய ஆய்வாளா் அளித்த புகாரின் பேரில் மாா்ச் 31-இல் மதபோதகா் உள்பட 7 போ் மீது தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஆனால், இந்த மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மெளலானா சாத் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்த போதிலும் அவரை இதுவரை கைது செய்யவில்லை. போதுமான கால அவகாசம் இருந்தும் போலீஸாா் அவரைக் கண்டுபிடித்துக் கைது செய்யத் தவறிவிட்டனா். தப்லீக் ஜமாத்தை சோ்ந்தவா்கள் பொது முடக்க விதிகளை புறந்தள்ளி ஆபத்தான வைரஸ் நோய்த் தொற்றை நாடு முழுவதும் பரப்பியது மட்டுமின்றி, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவா்களையும் தாக்கினா். ஜமாத் மற்றும் பிறருடன் தொடா்புடைய அறக்கட்டளைகள், மெளலானா சாத் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கை அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளது. ஆகவே, மெளலானா சாத் தொடா்புடைய வழக்கை தில்லி காவல் துறையிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

நாடாளுமன்றத்தில் நிதீஷ் குமார்! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்!

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும்: பாஜக புகார்

நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜிநாமா!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

