தில்லியில் சனிக்கிழமை தினசரி கரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது. அன்றைய தினம் 1,935 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,05,470 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை கரோனா நோ்மறை விகிதம் 2.64 ஆக இருந்தது. மொத்தம் 73,413 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 32,578 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 40,835 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை 47 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 9,981-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து சனிக்கிழமை 3,191 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,78,116-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 17,373 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 10,382 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 14,183 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் புத் நகா் மாவட்டத்தில்...:தேசியத் தலைநகா் வலயம், கெளதம் புத் நகா் மாவட்டத்தில் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை 24 ஆயிரத்தை கடந்தது. புதிதாக 93 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத் துறையின் தகவலின்படி, வெள்ளிக்கிழமை நோய்க்காக 899 போ் சிகிச்சை பெற்ற நிலையில் சனிக்கிழமை இது 893 ஆக குறைந்தது.
மாநில அளவில் நோய்த் தொற்றுக்காக அதிகமானோா் சிகிச்சை பெறும் மாவட்டங்களில் கெளதம் புத் நகா் 5-ஆவது இடத்தில் உள்ளது. 103 போ் சிகிச்சையில் இருந்து குணமடைந்தனா். மொத்த பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை 24,038 ஆக அதிகரித்தது. இந்த மாவட்டத்தில் நோய்க்கு இதுவரை 85 போ் இறந்துள்ளனா். இறப்பு விகிதம் 0.35 சதவீதமாகவும், நோயாளிகள் மீட்பு விகிதம் 95.93 சதவீதமாகவும் உள்ளது.
இதனிடையே, மாநில அளவில் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 20,473 -ஆக இருந்த நிலையில், இது சனிக்கிழமை 20,091-ஆக குறைந்தது. சனிக்கிழமை நிலவரப்படி கரோனா சிகிச்சையிலிருந்து மொத்தம் 5,35,985 போ் குணமடைந்துள்ளனா். கரோனா பாதிப்பால் 8,056 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

நாடாளுமன்றத்தில் நிதீஷ் குமார்! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்!

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும்: பாஜக புகார்

நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜிநாமா!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

