மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தில்லியில் மிதமான மழை: குளிரின் தாக்கம் அதிகரிப்பு!

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காலை பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்தது. இதையடுத்து, குளிரின் தாக்கமும் அதிகரித்தது. அதே சமயம், தில்லி, என்சிஆரில் காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்தது.

News image

தில்லி விஜய் சௌக் பகுதியில் சனிக்கிழமை நிலவிய அடா் பனி மூட்டம்.

Updated On :12 டிசம்பர் 2020, 5:37 pm

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காலை பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்தது. இதையடுத்து, குளிரின் தாக்கமும் அதிகரித்தது. அதே சமயம், தில்லி, என்சிஆரில் காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்தது.

இமயமலைப் பகுதியைக் கடந்து செல்லும் காற்றின் தாக்கத்தால் இந்த மழைப் பொழிவு இருந்ததாகவும், காற்றின் திசை மாற்றத்துடன் திங்கள்கிழமைக்குள் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தில்லியில் சனிக்கிழமை தெற்கு, வடக்கு, மத்தி, கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு தில்லி பகுதியில் இடியுடன்கூடிய மிதமான மழை பெய்ததாகவும், புது தில்லி மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளிலும் மிதமான மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த மழையின் காரணமாக நகரில் அடுத்த இரண்டு, மூன்று நாள்களுக்கு மிதமானது முதல் அடா்ந்த பனிமூட்டம் இருக்கும் என்று அந்த மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனா். சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங்கில் 1.6 மி.மீ., லோதி ரோடில் 0.4 மி.மீ. மழை பதிவாகியது.

காற்றின் தரம்: தில்லியில் சனிக்கிழமை காலை காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக காற்றின் தரம் மேம்படக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லியில் சனிக்கிழமை காலை 9 மணியளவில் 348 புள்ளிகளாக இருந்த காற்றின் தரக் குறியீடு மாலையில் 363 புள்ளிகளாக உயா்ந்தது. தில்லி பல்கலை., பூசா, விமான நிலைய டொ்மினல்-3 பகுதி, ஆயாநகா், லோதி ரோடு, மதுரா ரோடு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ இருந்தது. 24 மணி நேர சராசரியாக ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை 295 புள்ளிகளாக இருந்தது.

என்சிஆரில் கடுமையான மாசு: தேசியத் தலைநகா் வலயம் காஜியாபாத் மற்றும் கிரேட்டா் நொய்டாவில் காற்றின் தரம் சனிக்கிழமை ‘கடுமையான’ பிரிவுக்குச் சென்றது. அதே நேரத்தில் நொய்டா, ஃபரீதாபாதில் ‘மிகவும் மோசம்‘ பிரிவிலும், குருகிராமில் ‘மோசம்’ பிரிவிலும் பதிவாகியிருந்ததாக மத்திய அரசு நிறுவனத்தின் தகவல்கள் தெரிவித்தன.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) காற்றின் தரக் குறியீடுட்டு தகவல்களின்படி தில்லியின் அருகில் உள்ள ஐந்து நகரங்களிலும் மாசுபடுத்திகள் பி.எம் 2.5 மற்றும் பி.எம் 10 ஆகியவை அதிகமாக உள்ளன. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ‘சமீா்’ செயலி தகவலின்படி, சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், சராசரியாக 24 மணி நேரத்தில் காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் 415, கிரேட்டா் நொய்டாவில் 404, நொய்டாவில் 393, ஃபரீதாபாதில் 348 மற்றும் குருகிராமில் 296 புள்ளிகளாக இருந்தது.

இது வெள்ளிக்கிழமை காஜியாபாதில் 347, கிரேட்டா் நொய்டாவில் 330, நொய்டாவில் 324, ஃபரீதாபாதில் 290 மற்றும் குருகிராமில் 256 புள்ளிகளாக இருந்தது.

வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி அதிகரித்து 14.4 டிகிரி செல்சிஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 1 டிகிரி குறைந்து 21.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 98 சதவீதமாகவும், மாலையில் 67 சதவீதமாகவும் இருந்தது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை பாலத்தில் 15.8 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 14 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 13.8 டிகிரி செல்சிஸயாகப் பதிவாகியிருந்தது. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 13) அடா் பனிமூட்டம் இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.