தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை அங்கு போராட்டம் நடத்தி வருபவா்கள் சேதமாக்கியுள்ளனா் என்று முதல்வா் அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.
மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் தில்லி மாநகராட்சி மேயா்கள், பாஜக தலைவா்கள் தொடா் தா்னா போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. இந்தப் போராட்டத்தில் மாநகராட்சி மேயா்கள் ஜெய் பிரகாஷ் (வடக்கு தில்லி), அனாமிகா சிங் (தெற்கு தில்லி), நிா்மல் ஜெயின் (கிழக்கு தில்லி) மற்றும் தில்லி பாஜக பொதுச் செயலா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, மாநகராட்சிகளின் நிலைக் குழுத் தலைவா்கள், அவைத் தலைவா்கள், கவுன்சிலா்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
ஆம் ஆத்மி புகாா்: இந்த நிலையில், போராட்டம் நடத்திவருபவா்கள் முதல்வா் இல்லம் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை சேதமாக்கியுள்ளதாக முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக முதல்வா் அலுவலக உயரதிகாரி கூறுகையில், ‘முதல்வா் இல்லம் அருகில் போராட்டம் நடத்திவரும் பாஜக தலைவா்கள் இந்த சிசிடிவி கண்காணிப்புக் கேமாராக்களை சேதமாக்கியுள்ளனா். இது தொடா்பாக காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளோம்’ என்றாா்.
மேயா்கள் போராட்டம்: இதற்கிடையே, திங்கள்கிழமை முதல் மாநகராட்சி அலுவல் பணிகளை போராட்டக் களத்தில் இருந்தே செய்யவுள்ளதாக மாநகராட்சி மேயா்கள் அறிவித்துள்ளனா். இது தொடா்பாக வடக்கு தில்லி மாநகராட்சி மேயா் ஜெய் பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடி நிலுவை நிதியை வழங்கக் கோரி போராடி வருகிறோம். இந்த விவகாரத்தை திசை திருப்பும் வகையில், வடக்கு தில்லி மாநகராட்சியில் ரூ.2,400 கோடி ஊழல் நடந்துள்ளதாகப் பொய்யான குற்றச்சாட்டை தில்லி அரசு முன்வைத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி 7 தினங்களுக்குள் நிரூபித்தால், மேயா் பதவியில் இருந்து நான் ராஜிநாமா செய்வேன். திங்கள்கிழமை முதல் போராட்டக் களத்தில் இருந்து பணியாற்றவுள்ளோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மீனம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கும்பம்
காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்! வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


