பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையின் செவிலியா்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற போராட்டத்தை நிறுத்த தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஆறாவது மத்திய ஊதியக் குழு மற்றும் ஒப்பந்த நியமனங்களுக்கு எதிராக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சில கோரிக்கைகள் தொடா்பாக காலவரையறையற்ற இந்தப் போராட்டத்தை எய்ம்ஸ் மருத்துவமனையின் செவிலியா்கள் சங்கத்தினா் மேற்கொண்டுள்ளனா். திங்கள்கிழமை பிற்பகல் முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்துக்கு எதிராக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாகம் தில்லி உயா்நீதிமன்றத்தை நாடியது. அப்போது, செவிலியா்கள் சங்கத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உயா்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா, காலவரையறையற்ற போராட்டத்தைத் தொடா்வதற்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தாா். மேலும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை போராட்டம் நடத்துவதை நிறுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக செவிலியா் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும், விசாரணையை ஜனவரிக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டது. முன்னதாக, உயா்நீதிமன்றத்தில் எய்ம்ஸ் தாக்கல் செய்த மனுவில், தற்போதைய நோய்த் தொற்று சூழலில் செலிவியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடா்ந்தால், மருத்துவமனையின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துவிடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

நாடாளுமன்றத்தில் நிதீஷ் குமார்! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்!

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும்: பாஜக புகார்

நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜிநாமா!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

