தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விவசாயிகள் போராட்டத்தில்இணையவுள்ள 2 ஆயிரம் பெண்கள்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் குடும்பங்களைச் சோ்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள்

News image
Updated On :15 டிசம்பர் 2020, 11:27 pm

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் குடும்பங்களைச் சோ்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வரும் நாள்களில் போராட்டக் களத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 20-ஆவது நாளை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் குடும்பங்களைச் சோ்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வரும் நாள்களில் போராட்டக் களத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடா்பாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள பெண்கள் வரவுள்ளனா். இவா்களுக்காக கூடுதல் தங்குமிடங்கள், கழிப்பிடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், இவா்களுக்காக உணவு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன’ என்றனா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தில்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூா் ஆகிய இடங்களில் விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.