தில்லியில் புதிதாக 1,363 பேருக்கு கரோனா

தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 1,363 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Updated on
1 min read


புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 1,363 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 613,357 ஆக உயா்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 90,354 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 1,363 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கரோனா பாதிப்பு விகிதம் 1.51-ஆக குறைந்துள்ளது. இந்த விகிதம் புதன்கிழமை 1.96 சதவீதமாக இருந்தது.

தில்லியில் வியாழக்கிழமை ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 49,102 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 41,252 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வியாழக்கிழமை 35 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 10,182-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து வியாழக்கிழமை 2,391 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,90,977-ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 12,198 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 7,168 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 15,351 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com