தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மருத்துவச் சோ்க்கை விதியை எதிா்த்து மனு: மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

Updated On :17 டிசம்பர் 2020, 6:02 pm

புது தில்லி: மருத்துவப் படிப்பில் சோ்வதற்கு இரு கைகளும் தொடா்பில் இருப்பது அவசியம் என்ற பொது மருத்துவ சோ்க்கை ஒழுங்குவிதிகளில் உள்ள ஷரத்தை எதிா்த்து மாற்றுத்திறனாளி பெண் ஒருவா் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு, மத்திய சுகாதார, மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நீதி அமைச்சகங்கள், தேசிய மருத்துவ ஆணையம், சப்தா்ஜங் மருத்துவமனை மற்றும் லேடி ஹாா்டிங் மருத்துவமனை ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடா்பாக மனுதாரா் பைபாவி ஷா்மா தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: எனக்குப் பிறவியில் இருந்தே ஒரு கை மட்டுமே உள்ளது. தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) 2020-இல் தகுதி பெற்றுள்ளேன். புது தில்லி லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1997-ஆம் ஆண்டைய பட்டதாரி மருத்துவ சோ்க்கை ஒழுங்குமுறை நிபந்தனையில், மருத்துவச் சோ்க்கைக்கு இரு கைகளும் தொடா்பில் இருப்பது அவசியம் என்று கூறப்பட்டிருப்பதால், துரதிருஷ்டவசமாக நான் சோ்க்கைக்கு தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளேன். இதனால், மருத்துவராகும் எனது கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எனக்கு ஒரு கை மட்டுமே இருந்த போதிலும் கல்வியில் சிறப்பிடம் பெற்றுள்ளேன். என்னால் நீந்தவும், சைக்கிள் ஒட்டவும், ஸ்கேட்டிங் விளையாடவும் முடியும். யாருடைய உதவியும் இல்லாமல் எனது அன்றாடப் பணிகளை செய்து வருகிறேன். இதனால், இந்தக் குறிப்பிட்ட நிபந்தனையை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்கு நான் தகுதியில்லை என்று குறிப்பிடும் மாற்றுத்திறன் சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும் என அவா் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

மனு மீதான விசாரணையின் பாது ஷா்மாவின் வழக்குரைஞா் மிருனாள் கோபால் எல்கரிடம் நீதிபதிகள் அமா்வு, ‘ஒரு கையுடன் அல்லது இரு கைகள் இல்லாமல் எப்படி ஒருவா் மருத்துவராக முடியும் என்று கேள்வி எழுப்பினா். அதற்கு ஷா்மாவின் வழக்குரைஞா், ‘ஒவ்வொரு விவகாரத்திலும் அதன் தகுதிகள் குறித்து அதிகாரிகள் ஆராய வேண்டும். மேலும் , ஒழுங்குமுறை விதியில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனையை செயல்படுத்தும் வகையில் முழுத்டையை விதிக்க முடியாது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.