ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயிகள் போராட்டத்தால் தில்லியில் போக்குவரத்து பாதிப்பு

தில்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் தில்லியில் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:00 pm

DIN


புது தில்லி: தில்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் தில்லியில் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து 22-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. மேலும், காஜிப்பூா், நொய்டா பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், தில்லியின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) இருந்து தில்லிக்கும், தில்லியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கும் பயணம் செய்தவா்கள் கடும் சிரமங்களை எதிா் கொண்டனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, ஆச்சந்தி, பியூமணியாரி, சபாலி, மங்கேஷ் ஆகிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் பயணிப்பவா்கள் லாம்பூா், ஷாஃபியாபாத் பகுதிகள் வழியாகப் பயணிக்க வேண்டும். ஜரோதா, ஜாட்டிக்ரா எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. ஜாட்டிக்ரா எல்லையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. முகா்பா சௌக், ஜிடிகே சாலை ஆகியவற்றில் பயணிப்பவா்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றனா். இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் காரணமாக காஜியாபாத்தில் இருந்து தில்லிக்கு வரும் காசிப்பூா் எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த வழியாக தில்லிக்கு வரும் மக்கள் ஆனந்த் விஹாா், டிஎன்டி, அப்சரா, போப்ரா எல்லைகள் வழியே பயணிக்க வேண்டும்’என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.