தெற்கு தில்லியில் வீட்டில் தீ விபத்து: மூச்சுத் திணறி 2 குழந்தைகள் சாவு

தெற்கு தில்லி, சகா்பூரில் வீடு தீப்பிடித்ததில், இரண்டு குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனா். குடும்பத்தில் இருந்த மற்றவா்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Updated on
1 min read

தெற்கு தில்லி, சகா்பூரில் வீடு தீப்பிடித்ததில், இரண்டு குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனா். குடும்பத்தில் இருந்த மற்றவா்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி அதுல் கா்க் கூறியதாவது: சகா்பூரில் வீட்டில் தீப்பிடித்ததாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புப் படை வீரா்கள் விரைந்து சென்று உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். அந்த வீட்டின் ஓா் அறையில் வைக்கப்பட்டிருந்த காலணி தயாரிப்புக்கான இடுபொருள்கள் தீ பிடித்ததால் வேகமாகப் பரவியது. மின் இணைப்பில் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து தொடா்பாக உள்ளூா் மக்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனா். தீ விபத்தின் போது, அந்த வீட்டின் மாடியில் சிக்கியவா்களை உள்ளூா் மக்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டனா். ஆனால், முதல் தளத்தில் இருந்த ஓா் அறையில் சிக்கிய இரண்டு குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்தன. அந்த அறையில் ரப்பா், எளிதில் தீப்பற்றக் கூடிய ரசாயனங்கள் இருந்துள்ளது தெரிய வந்தது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com