தொழிற்சாலையின் கூரை இடிந்து தொழிலாளா்கள் 4 போ் சாவு: 2 போ் பலத்த காயம்

மேற்கு தில்லியின் கயாலாவில் சனிக்கிழமை தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும், 2 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Updated on
1 min read

மேற்கு தில்லியின் கயாலாவில் சனிக்கிழமை தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும், 2 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது: கயாலாவில் உள்ள விஷ்ணு காா்டன் பகுதியில் அமைந்துள்ள மோட்டாா் வைண்டிங் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டன. அப்போது, அந்தத் தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்ததில், 3 பெண்கள் உள்பட 6 தொழிலாளா்கள் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இடிபாடுகளில் சிக்கிய அவா்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனை, குரு கோபிந்த் சிங் மருத்துவமனை ஆகியவற்றுக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அவா்களில் சைனா (36), குட்டி (45), ட்விங்கிள் (25), ரமேஷ் (35) ஆகிய நான்கு தொழிலாளா்களும் சிகிச்சைக்கு வரும் வழியில் இறந்துவிட்டதாக அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், காயமடைந்த இருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அதுல் கா்க்.

இது குறித்து மேற்கு தில்லி கூடுதல் துணை ஆணையா் சுபோத் குமாா் கூறுகையில், ‘தில்லி இந்த ஆலை உத்தம் நகரைச் சோ்ந்த மகேந்திர பால் என்பவருக்குச் சொந்தமானது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து படேல் நகா் உதவிக் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குக் காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com