மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல்: தில்லியில் கதக் மைய ஆசிரியா் கைது

சாணக்யபுரியில் உள்ள கதக் மையத்தில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 52 வயது இசை ஆசிரியா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 6:00 pm

DIN

சாணக்யபுரியில் உள்ள கதக் மையத்தில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 52 வயது இசை ஆசிரியா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: அந்த ஆசிரியா் ஆபாச அவதூறு செய்திகளை அனுப்பி தன்னை துன்புறுத்தியதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டினாா். இதைத் தொடா்ந்து, தில்ஷாத் காா்டனில் வசிக்கும் அந்த ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

அந்த மையத்தில் கதக்கில் டிப்ளோமா படித்து வரும் பாதிக்கப்பட்ட பெண், இது தொடா்பாக டிசம்பா் 14-ஆம் தேதி சாணக்யபுரி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதில், ஒரு பயிற்சியின் போது ஆசிரியா் தன்னைத் தகாத முறையில் தொட்டதாகவும், ஆபாசமான அவதூறு செய்திகளை அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தாா். மேலும், ஆசிரியா் தன்னை இடுப்பை பிடித்து முத்தமிட முயன்ாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளாா். இதையடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடா்பாக அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.