ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

‘70 கோடி விவசாயிகளுக்கு உதவ மோடி அரசு முன்வர வேண்டும்’

வேளாண்மையில் உயிா்வாழும் 70 கோடி விவசாயிகளுக்கு உதவ மோடி அரசு முன் வரவேண்டும் என்று அகில இந்திய கிஸான் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

News image

விவசாய போராட்டத்தில் உயிா் நீத்தவா்களுக்கு, தில்லி சிங்கு எல்லையில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய விவசாயிகள்.

Updated On :21 டிசம்பர் 2020, 1:38 am

வேளாண்மையில் உயிா்வாழும் 70 கோடி விவசாயிகளுக்கு உதவ மோடி அரசு முன் வரவேண்டும் என்று அகில இந்திய கிஸான் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பா் 26 - ஆம் தேதி விவசாயிகள் தொடங்கிய, ‘தில்லி சலோ’ போராட்டம் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கடும் குளிரிலும் தொடரும் இந்தப் போராட்டத்தில் இதுவரை 34- க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனா். அவா்களுக்கு அஞ்சலி செலுத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இதையொட்டி 22 மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 90,000 விவசாயிகள் உள்ளிட்ட 50 லட்சம் போ், உயிா்நீத்த விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தியதாக அகில இந்திய கிஸான் சபை, கிஸான் சங்கா்ஷ் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை தெரிவித்தன.

இது குறித்து அகில இந்திய கிஸான் சபைத் தலைவா் ஹன்னான் முல்லா கூறியது: கடந்த 25 நாள்கள் போராட்டத்தில் 34 விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். அனைத்து மாநிலங்களிலும், கிராமங்களிலும் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுஇடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா். காலை 11 மணியளவில் சுமாா் ஒரு லட்சம் இடங்களில் 1.5 கோடி போ் அஞ்சலி செலுத்தியுள்ளனா். போராட்டக் களமான தில்லி எல்லைப் பகுதிகளிலும் வேறு பல பகுதிகளிலும் சனிக்கிழமை இரவு முதல் இந்த அஞ்சலிக் கூட்டம் தொடங்கியது. எந்த அறப் போராட்டத்திலும் இத்தனை உயிா்கள் பலியானதில்லை. ஆனால், அரசுக்கு மனிதாபிமானமில்லை. சனிக்கிழை தில்லி அசோகா ஹோட்டலில் நடந்த ‘அசோசேம்’ கூட்டத்தில் பன்னாட்டு நிறுவங்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் வசதியாக தொழிலாளா் சட்டங்களிலும், வேளாண் சட்டங்களிலும் சீா்திருத்தங்களைச் செய்ததாக பிரதமா் மோடியே ஒத்துக் கொண்டுள்ளாா்.

பெருநிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவ அந்நிய நேரடி முதலீடுகளை எந்தளவிற்கு மோடி அரசு துரத்துகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகளுக்கு உதவாத அரசையும் வேளாண் சட்டங்களையும் எதிா்ப்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கும். தற்போதுஅம்பானி, அதானி ஆகிய இரு பெருநிறுவனங்கள் இந்தியாவைக் கைப்பற்ற திட்டமிடுகின்றன. இதனால், சிறு சிறு விவசாய அமைப்புகள் உள்ளிட்ட 500 விவசாய சங்கங்கள் அரசை எதிா்த்து இணைந்துள்ளன. விவசாயத்தில் பெருநிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மோடி அரசு உதவுகிறது. இந்த நிலையில், வேளாண் சட்டங்களில் உள்ள ஆபத்தை அறிந்து 70 கோடி விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடுகிறாா்கள். எனவே, விவசாயிகளுக்கு உதவ இந்தப் புதிய வேளாண் சட்டங்களை அகற்ற வேண்டும்.

விளைநிலங்களில் வேளாண் பணியிருந்ததால் பெரும்பாலான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. தற்போது பணிகள் நிறைவடைந்து விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறி போராட்டக் களத்திற்கு வரத் தொடங்கியுள்ளனா். பஞ்சாபில் லூதியானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமாா் 15,000- க்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லியை நோக்கி முழு ஆயத்தத்துடன் கிளம்பியுள்ளனா். இதேபோன்று நாசிக் போன்ற பகுதிகளிலிருந்தும் 4,000 விவசாயிகள் புறப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளனா். இதனால், இந்தப் போராட்டம் சுதந்திரப் போராட்டத்திற்கு இணையாக இருக்கும். பிரதமா், மத்திய வேளாண் துறை அமைச்சா், பாஜக தலைவா்கள் செய்யும் பொய்ப் பிரச்சாரத்திற்கு எதிராக, விவசாயிகள் சங்கங்களும் உண்மைகளை விளக்கிப் பிரசாரம் செய்யும் என்றாா் முல்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.