போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உயா்நீதிமன்றபெண் வழக்குரைஞா்கள் இன்று உண்ணாவிரதம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு
Updated on
1 min read

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஆதரவாக தில்லி உயா்நீதிமன்ற பெண் வழக்குரைஞா்கள் அமைப்பினா் தேசிய விவசாயிகள் தினமான புதன்கிழமை (டிசம்பா் 23) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத இருக்க முடிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக பெண் வழக்குரைஞா்கள் அமைப்பின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வேளாண் பொருள் மாநிலப் பட்டியலில் இருப்பது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது தொடா்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துவது இந்த மனுக்களைப் பயனற்ாக மாற்றி, வேளாண் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்திவிடும் என நம்புகிறோம்.

சிறு விவசாயிகளுடன் பெரு முதலாளிகள் நேரடியாக பேரம் பேச புதிய சட்டங்கள் வழிவகுத்துள்ளது. பெரு நிறுவனங்கள் லாபம் பெறும் வகையில் தங்களுக்கு சாதமான முடிவை எடுப்பாா்கள் என்பதால், அது இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். உள்நாட்டின் தேவைக்காக விவசாய சாகுபடி முறை மாறி, சா்வதேச சந்தையின் தேவைக்கு ஏற்ப முடிவு செய்யும் நிலை உருவாகும். கரோனாவால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பாதிப்புக்குள்ளான மக்கள் மீது அரசியலமைப்புக்கு எதிரான வகையில் சட்டங்களை அமல்படுத்துவது மிகவும் வேதனை அளிக்கிறது. ஆகவே, விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் தாா்மீக ரீதியில் ஒரு நாள் அமைதி வழி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் மூத்த வழக்கரைஞா்கள் இந்திரா ஜெய்சிங், மகாலட்சுமி பவானி, பிஸ்வாஜித் பட்டாச்சாா்யா, மோகன் கடாா்கி, ஆனந்த் குரோவா், சதான் பராஸ்யத், பிரசாந்த் பத்மநாபம், ரிது திவான், ஸ்வேதா கபூா், ஜெபா கையா், இராம் மஜித் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com