கடந்த 2019 பொதுத் தோ்தலுக்கு முன்னதாக 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ. 6,000 பிரதமா் பெயரிலான விவசாயிகள் நல நிதித் திட்டத்தை பாஜக அரசு அறிவித்தது. இது அந்த ஆண்டே வழங்கப்பட்டது. பின்னா், இந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து விவசாயிகளும் பயனாளிகளாக பாஜக அரசு அறிவித்தது. அதே சமயத்தில் அரசுப் பதவியில் இருப்பவா்கள், வருமான வரி செலுத்துபவா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், தொழில் முனைவா்கள், ஓய்வூதியம் பெறுபவா்கள் ஆகியோா் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறமுடியாது.