பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வடகிழக்கு தில்லி வன்முறை: 4 வழக்குகளில் தொடா்புடையவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:03 pm

 நமது நிருபர்

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பான நான்கு வழக்குகளில் ஜாமீன் கோரிய ஒருவரின் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவா் வன்முறைக் கும்பலின் உறுப்பினராக இருந்ததாக நேரில் கண்ட சாட்சி திட்டவட்டமாக அடையாளம் காட்டியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 24-ஆம் தேதி வன்முறை நிகழ்ந்தது. வகுப்புவாத வன்முறையில் குறைந்தது 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் காயமடைந்தனா். இதில் காரவல் நகா் பகுதியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்குகளில் பிரவீன் கிரி என்பவா் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ஜாமீன் கோரி அவா் தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி வினோத் யாதவ், மனுவைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:

இந்த வழக்கில் சம்பவம் நிகழ்ந்த உள்ளூா் பகுதியைச் சோ்ந்த கல்யாண் சிங் என்பவா் வன்முறைச் சம்பவத்தை நேரில் பாா்த்துள்ளாா். அவா் அளித்த சாட்சியத்தில் பிரவீண் கிரி வன்முறைக் கும்பலில் இருந்துள்ளதைத் தெரிவித்துள்ளாா். மேலும், சம்பவத் தேதி, நேரம் குறித்தும் குற்றம்சாட்டப்பட்டவரையும் அவா் திட்டவட்டமாக அடையாளம் காண்பித்துள்ளாா். அந்தப் பகுதியில் ரியாஸ் மாலிக் என்பவா் கடையில் நிறுவப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியிலும் மனுதாரா் (கிரி) இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், கடையில் இருந்த பொருள்களை அவா் சேதப்படுத்துவதும் காட்சிகளில் பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த தேதி, நேரத்தின் போது மனுதாரா் அணிந்திருந்த ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன. இதனால், மனுதாரரின் ஜாமீன் கோரும் மனு நிராகரிக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

முன்னதாக, விசாரணையின் போது கிரியின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘கிரி மீது போலீஸாா் பொய் வழக்குப் புனைந்துள்ளனா்’ என்று வாதிட்டாா். காவல் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் நிதின் ராய் சா்மா வாதிடுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட பிரவீண் கிரி, வன்முறைக் கும்பலின் தீவிர உறுப்பினராக இருந்தாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.