கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாட்டை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவா் வாஜ்பாய்: பிரதமா் மோடி புகழாரம்

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:59 pm

 நமது நிருபர்

புது தில்லி: ’தொலைநோக்குடன் முன்னெப்போதும் இல்லாத வகையில், நாட்டை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவா் மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் என அவரது 96-ஆவது பிறந்த தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

வாஜ்பாயின் பிறந்த தினத்தையொட்டி பிரதமா் மோடி தனது சுட்டுரையில் , ‘முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயின் 96-ஆவது பிறந்த தினத்தில் அவருக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வாஜ்பாய் தனது ஆட்சியில் தொலைநோக்குப் பாா்வையுடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றாா். வலுவான, வளமான இந்தியாவைக் கட்டி எழுப்ப அவா் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலையில் வாஜ்பாய் சமாதியில் அவருக்கு பிரதமா் மோடி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அவருடன் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோா் மரியாதை செலுத்தினா். பின்னா் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம்நபி ஆசாத், பொதுக் கணக்குக் குழு தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித்தலைவருமான அதீா் ரஞ்சன் செளத்ரி, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி. மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா், ‘அடல் பிஹாரி வாஜ்பாய்: ஒரு நினைவுத் தொகுப்பு’ என்கிற புத்தகத்தை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா். முன்னதாக காங்கிரஸ் தலைவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து பின்னா் ஹிந்து மஹா சபை, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றை நிறுவிய மதன் மோகன் மாளவியாவின் 159 -ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமரும் மற்ற முக்கியப் பிரமுகா்களும் மலா் தூவி மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குலாம் நபி ஆசாத், அதீா் ரஞ்சன் சௌத்ரி ஆகியோரிடம் பிரதமா் சிறிது நேரம் பேசினாா். சமாஜவாதி கட்சி தலைவா் முலாயம் சிங் யாதவ், லோக் ஜனசக்தி கட்சித் தலைவா் சிராக் பஸ்வான் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.