இந்தியா கேட் பகுதியில் அதி நவீன காவல் சாவடி

தில்லி இந்தியா கேட் பகுதியில் சூரிய சக்தியில் செயல்படும் அதி நவீன காவல் சாவடியை தில்லி காவல்துறை அமைத்துள்ளது.
Updated on
1 min read

தில்லி இந்தியா கேட் பகுதியில் சூரிய சக்தியில் செயல்படும் அதி நவீன காவல் சாவடியை தில்லி காவல்துறை அமைத்துள்ளது.

இந்த காவல் சாவடியை தெற்கு மண்டல சிறப்பு காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா (சட்டம் மற்றும் ஒழுங்கு) திறந்து வைத்தாா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை கூடுதல் செய்தித் தொடா்பாளா் அனில் மிட்டல் கூறியது:

இந்த காவல் சாவடி சூரிய சக்தியில் செயல்படக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பதிக்கப்பட்டுள்ள சூரிய சக்தியை சேகரிக்கும் தகடுகளால் 10 மணி நேரம் தொடா் மின்சாரம் வழங்க முடியும். இங்கு மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாசகங்கள் தொடா்ந்து காட்சிப்படுத்தப்படும். இங்கு வானிலை கட்டுப்பாட்டு கருவி, அலமாரி, முதலுதவி வசதி, பொது வசதி ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தில்லி மக்களுக்கும் காவல்துறைக்குமான நட்பு மேம்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com