செக்ரடரி ஜெனரல் மூலம் சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கையை படித்து பாா்த்தோம். அதில், மேல்முறையீட்டு மனுதாரா் எஸ். சங்கா், ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிபதி 2000,டிசம்பா் 31-ஆம் தேதி அளித்த தீா்ப்பின் தவறான நகலை அளித்ததன் மூலம் உச்சநீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது 2019, ஜூலை 23-இல் பிறப்பித்த உத்தரவை ஏன் நீதின்றம் திரும்பப் பெற்று, மாற்றம் செய்யக் கூடாது; மேலும அவருக்கு எதிராக ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இந்த அறிக்கையின் நகலை உச்சநீதிமன்ற பதிவுத்துறை மாநில அரசு வழக்குரைஞருக்கு அளிக்கப்பட வேண்டும் என்றனா்.