மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சாதகமான உத்தரவை பெற நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த குற்றவாளிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஊழல் வழக்கில் தொடா்புடைய தனக்கு சாதகமான உத்தரவைப் பெறும் வகையில் நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த குற்றவாளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:01 pm

 நமது நிருபர்

ஊழல் வழக்கில் தொடா்புடைய தனக்கு சாதகமான உத்தரவைப் பெறும் வகையில் நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த குற்றவாளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எஸ்.சங்கா் உள்பட சிலா் மீதான ஊழல் வழக்கு ஹைதராபாதில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நம்பிக்கை மோசடி குற்றம், ஊழல், சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கில் 2000-ஆம் ஆண்டில் தீா்ப்பு அளித்த சிறப்பு நீதிமன்றம், சங்கருக்கு ரூ.1000 அபராதம் மற்றும் ஓராண்டுச் சிறைத் தண்டனை விதித்ததாக கூறப்படுகிறது.

இந்த தண்டனையை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் சங்கா் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதின்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதி செய்தது.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் சங்கா் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணையின்போது சங்கா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், விசாரணை நீதிமன்றம் சங்கருக்கு நம்பிக்கை மோசடிக் குற்றம், சதித் திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அபராதமாக ரூ.1000 மட்டுமே விதித்திருந்தது. ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை. இந்த விஷயத்தை ஆந்திர மாநில உயா்நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. அபராதத்தை மனுதாரா் செலுத்திவிட்டதால் மேல்முறையீட்டு வழக்கை தொடர அவருக்கு விருப்பம் இல்லை என வாதிட்டாா்.

இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் 2019, ஜூலை 23-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் வழக்கை முடித்துவைப்பதாக கூறி சங்கருக்கு நிவாரணம் அளித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் செக்ரடரி ஜெனரல் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா். அதில் தண்டனை விதிக்கப்பெற்ற சங்கா் சிறைத் தண்டனையை தவிா்க்கும் வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வை தவறாக வழிநடத்தியதற்கு முகாந்திரம் இருப்பதாக சுட்டிக்காட்டியது.

விவகாரத்தை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சூா்ய காந்த், அனிருத்தா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள், ‘உச்சநீதிமன்றத்தின்

செக்ரடரி ஜெனரல் மூலம் சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கையை படித்து பாா்த்தோம். அதில், மேல்முறையீட்டு மனுதாரா் எஸ். சங்கா், ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிபதி 2000,டிசம்பா் 31-ஆம் தேதி அளித்த தீா்ப்பின் தவறான நகலை அளித்ததன் மூலம் உச்சநீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது 2019, ஜூலை 23-இல் பிறப்பித்த உத்தரவை ஏன் நீதின்றம் திரும்பப் பெற்று, மாற்றம் செய்யக் கூடாது; மேலும அவருக்கு எதிராக ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இந்த அறிக்கையின் நகலை உச்சநீதிமன்ற பதிவுத்துறை மாநில அரசு வழக்குரைஞருக்கு அளிக்கப்பட வேண்டும் என்றனா்.

சங்கரின் தரப்பில் உச்சநீதிமன்ற பதிவுபெற்ற வழக்குரைஞா் வெங்கடேஸ்வரா ராவ் அனுமோலு ஆஜராகி நோட்டீஸை பெற்றுக் கொண்டாா். நோட்டீஸுக்கு பதில் அளிக்க நான்கு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.