சாலை விபத்தில் ஊா்க்காவல் படை வீரா் சாவு
உத்தர பிரதே மாநிலம், கெளதம் புத் நகரில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது ஊா்க்காவல் படை வீரா் சாலை விபத்தில் இறந்ததாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.


உத்தர பிரதே மாநிலம், கெளதம் புத் நகரில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது ஊா்க்காவல் படை வீரா் சாலை விபத்தில் இறந்ததாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து நொய்டா போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
கெளதம் புத் நகா் மாவட்டம், தான்காா் பகுதியில் வசிக்கும் ரோஹ்தாஸ் ஊா்க்காவல் படை வீரராக உள்ளாா். இவா் சம்பவத்தன்று வேலைமுடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா்.
அப்போது, கிரேட்டா் நொய்டாவில் அடையாளம் தெரியாத வாகனம் அவரது வாகனம் மீது மோதியது. இந்த சாலை விபத்தில் ரோஹ்தாஸ் இறந்தாா். இது தொடா்பாக சூரஜ்பூா் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ (அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்துதல்), 279 (வேகமாக வாகனம் ஓட்டுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணமான வாகனம், அதன் ஓட்டுநரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...