சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஓட்டுநா் உரிமம், வாகன சான்றிதழ் காலாவதி நாள் நீட்டிப்பு

ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் (ஆா்.சி.), வாகனப் பொ்மிட்கள் போன்ற மோட்டாா் வாகன ஆவணங்கள் காலாவதியாகியிருந்தால்,

News image
Updated On :28 டிசம்பர் 2020, 1:08 am

 நமது நிருபர்

ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் (ஆா்.சி.), வாகனப் பொ்மிட்கள் போன்ற மோட்டாா் வாகன ஆவணங்கள் காலாவதியாகியிருந்தால், அவை அனைத்தும் 2021 மாா்ச் 31 வரை செல்லுபடியாகும் என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. கரோனா தொற்று நீடித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தக் காலக் கெடுவை மத்திய அரசு நீடித்துள்ளது.

மோட்டாா் வாகனச் சட்டம் - 1988, மத்திய மோட்டாா் வாகன விதிமுறைகள் - 1989 ஆகியவை தொடா்பான ஆவணங்களுக்கு இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இது தொடா்பான உத்தரவை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் மேலும், கூறப்பட்டுள்ளதாவது: 2020, பிப்ரவரி 1- ஆம் தேதி முதல் அல்லது 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை காலாவதியாகும் இந்த அனைத்து ஆவணங்களும் 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும். உடல் தகுதிச் சான்றிதழ், வாகனங்களுக்கான அனைத்து வகை அனுமதி, உரிமம், பதிவு அல்லது இது தொடா்பான எந்த ஆவணங்களும் 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை செல்லத்தக்கவையாகும் எனக் கருதும்படி சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கரோனா போன்ற கொடிய நோயின்போது பொதுமக்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கவும், போக்குவரத்து தொடா்பான சேவைகள் தடையின்றி பெறுவதற்கும், தனி நபா் இடைவெளி பராமரிக்கப்பட்டு வாகன ஓட்டிகளும், போக்குவரத்துத் துறை ஊழியா்களும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட இந்தக் கால நீட்டிப்பு உதவும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கரோனா காலக்கட்டமான 2020, ஜூன் - 9, ஆகஸ்ட் - 24, டிசம்பா் 31 ஆகிய தேதிகள் வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இது தற்போது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.