தில்லி காவல் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி
காவல் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் மிக விரைவில் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


காவல் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் மிக விரைவில் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில், உள்ளகப் பதிவு செய்து கொள்ளுமாறு காவல்துறையில் பணியாற்றும் அனைவரையும் தில்லி காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியது: கரோனா தடுப்புப் பணிகளில் முன்களத்தில் நின்று தில்லி காவல் துறையினா் பணியாற்றி வருகிறாா்கள். இவா்களில் பலா் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். தில்லியில் கரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் இவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளோம். தில்லி காவல் துறையில் பணியாற்றும் போலீஸாா் உள்பட அனைவரையும் உள்ளகப் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
கரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் தடுப்பூசி போடுவது தொடா்பாக தில்லி காவல் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதற்காக, தில்லி காவல் துறையில் பணியாற்றும் அனைவரும் புழக்கத்தில் உள்ள தங்களது செல்லிடப்பேசி எண்ணை ஜனவரி 3-ஆம் தேதி முதல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
தில்லியில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், முதல் கட்டமாக சுமாா் 51 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதில், சுகாதாரத் துறை ஊழியா்கள் 3 லட்சம் போ், முன்களப் பணியாளா்கள் 6 லட்சம் போ், 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 50 வயதை விடக் குறைந்த வயதுடையவா்களாக இருந்தாலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் 42 லட்சம் பேருக்கும் முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...