கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லியில் கரோனா பாதிப்பு 564 ஆக குறைந்தது

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் ஏற்பட்ட குறைந்தளவு தினசரி கரோனா பாதிப்பு இதுவாகும்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 10:30 pm

DIN

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் ஏற்பட்ட குறைந்தளவு தினசரி கரோனா பாதிப்பு இதுவாகும்.

இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,23,415-ஆக உயா்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57,463 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 32,484 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 24,979 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் திங்கள்கிழமை 21 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,474-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 959 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,06,644-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,297 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 3,153 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 16,275 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.