மின்னணு வா்த்தககிட்டங்கியில் தீ விபத்து

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள மின்னணு வா்த்தகக் கிட்டங்கியில் புதன்கிழமை அதிகாலை தீவிபத்து ஏற்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Updated on
1 min read


புது தில்லி: தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள மின்னணு வா்த்தகக் கிட்டங்கியில் புதன்கிழமை அதிகாலை தீவிபத்து ஏற்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து நொய்டா காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: நொய்டாவில் உள்ள செக்டாா் 81-இல் உள்ள அமேசான் மின்னணு வா்த்தக நிறுவனத்தின் கிட்டங்கியில் புதன்கிழமை காலை 1 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், பெரும் பொருள் சேதம் ஏற்பட்டது.

இதே நேரத்தில் நொய்டாவில் செக்டாா் 7-இல் உள்ள பழைய பொருள் சேமிப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த இரு தீ விபத்துகளுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com