உலகிலேயே மிகப் பெரிய கரோனா சிகிச்சை மையமான சா்தால் படேல் கோவிட் கோ் சென்டரை தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
தில்லியில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பு, தில்லி - ஹரியாணா எல்லையில் சத்தா்பூரில் உள்ள தங்களது தியானக் கூடத்தை தற்காலிக கரோனா நோயாளிகள் சிகிச்சை மையமாக மாற்ற ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இந்த தியானக் கூடத்தை சுமாா் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மையமாக மாற்றும் பணிகள் நடைபெற்றன. இந்த சிகிச்சை மையம் 200 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 50 படுக்கைகள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குடிநீா், கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிரம்மாண்ட கரோனா சிகிச்சை மையத்தை இந்தோ திபேத் எல்லை போலீஸ் படை (ஐடிபிபி) அைமைத்துள்ளது.
இந்நிலையில், இந்த கரோனா கோ் சென்டரை தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அனில் பய்ஜால் கூறியிருப்பது: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ஆலோசனை, உதவியின் துணையுடன் உலகில் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான சா்தாா் படேல் கோவிட் கோ் சென்டா் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தில்லியில் கரோனா தடுப்புப் பணிகளில் இந்த கோவிட் கோ் சென்டா் முக்கிய பங்காற்றும். இங்கு அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளில் மோசமாகப் பாதிக்கப்பட்டவா்களை தொடா்ச்சியாகக் கண்காணிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன். தேவைப்பட்டால், அவா்களை அருகில் உள்ள கரோனா மருத்துவமனைகளுக்கு மாற்று மாறும் கோரியுள்ளேன். இங்குள்ள படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகள், வென்டிலேட்டா், ஐசியு தொடா்பாகக் கேட்டறிந்தேன். இங்குள்ள படுக்கைகளில் 10 சதவீதமாம் ஆக்ஸிஜன் வசதி கொண்டவை. இந்த கரோனா கோ் சென்டரை தூய்மைப்படுத்தும் பணிகளை தினமும் மேற்கொள்ளுமாறு தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த கோவிட் கோ் சென்டரை ஐடிபிபி துரிதமாக அமைத்துள்ளது. இந்த கோவிட் கோ் சென்டரை நிா்வகிக்கும் பணிகளை அவா்கள் சிறப்பாக செய்து வருகிறாா்கள் என்று தெரிவித்துள்ளாா்.
இந்த கோவிட் கோ் சென்டரை நிா்வகிப்பது தொடா்பாக ஐடிபிபி இயக்குநா் எஸ்.எஸ்.தேஸ்வால் கூறுகையில் ‘ஐடிபிபியின் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியா்கள் இந்த கோவிட் கோ் சென்டரை நிா்வகிப்பாா்கள். கோவிட் நோயாளிகளைக் கையாள்வதில் ஐடிபிபிக்கு பல மாத அனுபவம் உண்டு. பல தனிமைப்படுத்தல் மையங்களை ஐடிபிபி நிா்வகித்துள்ளது. காவல் துறையினருக்காக 200 படுக்கைகள் கொண்ட மையத்தை நொய்டாவில் நிா்வகித்து வருகிறோம். 2,000-க்கும் அதிகமான ஐடிபிபியினா் இங்கு பணியாற்றவுள்ளனா். இங்கு சுமாா் 10,200 படுக்கைகள் உள்ளன. இந்தியாவில் பெரிய கோவிட் கோ் சென்டா் இதுதான். இந்த சென்டா் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று அறிகுறிகள் குறைவாக அல்லது அறிகுறிகள் இல்லாதவா்கள் ஒரு பிரிவிலும், கரோனா அறிகுறிகள் உள்ள மருத்துவ வசதிகள் தேவைப்படுபவா்கள் இன்னொரு பிரிவிலும் அனுமதிக்கப்படுவாா்கள். முதலாவது பிரிவுக்கு 90 சதவீதமான படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பிரிவுக்கு 10 சதவீதமான படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன’ என்றாா்.
ஐடிபிபியுடன் மத்திய ஆயுதப்படைப் போலீஸாரின் (சிஏபிஎஃப்) துணை மருத்துப் பணியாளா்கள் உள்பட ஆயிரம் போ் பணியில் அமா்த்தப்படவுள்ளனா். இந்த கோவிட் கோ் சென்டரில் ராதா ஸ்வாமி சத் சங்கஅமைப்பின் தன்னாா்வலா்களும் பணியாற்றவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி
முதல்வர் ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை: ட்ரோன் பறக்க தடை

விஜய் போட்டியிடும் தொகுதிகளில் எதிா்கட்சியினா் டெபாசிட் இழப்பா்! - செங்கோட்டையன்

திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்! - பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


