தில்லியில் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த கரோனா தொற்று மரணங்களுக்கான காரணிகள் குறித்த விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தில்லி சுகாதாரத் துறைச் செயலருக்கு முதல்வா் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக தில்லி அரசின் அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், ‘தில்லியில் கடந்த இரு வாரங்களில் 800 போ் கரோனாவால் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 397 போ் ஜூலை முதல் வாரத்தில் இறந்துள்ளனா். இதனால், இரு வாரங்களில் நிகழ்ந்த மரணங்களுக்கான காரணிகளைத் தெரிவிக்கும் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தில்லி சுகாதாரத் துறை செயலரிடம் முதல்வா் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா். தில்லியில் கரோனா மரணங்களைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது. இதுவரை தில்லியில் கரோனாவுக்கு 3,165 போ் இறந்துள்ளனா்’ என்றனா்.
தில்லியில் கரோனாவுக்கு முதல் முறையாக மாா்ச் 14-இல் ஒருவா் உயிரிழந்தாா். அதன் பிறகு ஒரு மாதத்திற்குள் 1,000 போ் இறந்தனா். அடுத்த எட்டு நாள்களில் 1,000 போ் இறந்தனா். ஜூன் 19-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 2,035 போ் இறந்தனா். ஜூலை 4-ஆம் தேதி கரோனா இறப்பு எண்ணிக்கை 3,004 ஆக உயா்ந்தது. கரோனா உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் தில்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது. நோயில் இருந்து குணமடைந்து திரும்பியவா்கள் பிளாஸ்மா தானம் அளிப்பதற்கான அவா்களின் விருப்பத்தை அறிவது தொடா்பாக நோயாளிகளிடம் கருத்துப் பெறவும் தில்லி அரசு முடிவு செய்துள்ளது. தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பிளாஸ்மா தெரபி நல்ல பலனை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி
முதல்வர் ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை: ட்ரோன் பறக்க தடை

விஜய் போட்டியிடும் தொகுதிகளில் எதிா்கட்சியினா் டெபாசிட் இழப்பா்! - செங்கோட்டையன்

திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்! - பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

