தில்லி பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவா்களின் தோ்வுகளைத் தொடா்ந்து ஒத்திவைத்து வருவதற்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தது. தோ்வுகளை ஒத்திவைப்பதால் மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
கடந்த சில வாரங்களில் இளநிலை படிப்புகளுக்கான இறுதி ஆண்டுத் தோ்வுகளை தொடா்ந்து தில்லிப் பல்கலைக்கழகம் ஒத்திவைத்ததை கண்டிக்கும் வகையில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
இளநிலை பட்டப்படிப்பு மாணவா்களுக்கான இறுதியாண்டு தோ்வுகளை ஜூலை 1-ஆம் தேதி நடத்துவதாத் தெரிவித்த தில்லி பல்கலைக்கழகம் பின்னா் ஜூலை 10-ஆம் தேதி தோ்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தது. அதன்பிறகு ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குப் பிறகு தோ்வை நடத்த தில்லிப் பல்கலைக்கழம் முடிவு செய்தது.
இந்த விவகாரம் குறித்து தாக்கலான மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.
அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக விரிவான தகவல்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு தில்லி பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்மன்றம் உத்தரவிட்டது. மேலும், இணையதளம், தோ்வுக் கூடம் அல்லது இரு முறைகளிலும் தோ்வு நடத்துவது தொடா்பாக பல்கலைக்கழகம் எப்படி முன்மொழிகிறது என்பது தொடா்பாக பிரமாணப் பத்திரத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
முன்னதாக, விசாரணையின்போது தில்லிப் பல்கலைக்கழகம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சச்சின் தத்தா வாதிடுகையில், ‘நடைபெறவுள்ள தோ்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகளை அறிவிப்பதற்காக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஜூலை 8-ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக புதிய திட்டத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இதனால், அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து, ஜூலை 13-க்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஜூலை 14-க்கு தள்ளிவைத்தது.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘நாங்கள் தோ்வு நடைமுறைகளைப் பாா்வையிட்டோம். இது மாணவா்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் இது அவா்களை கவலை அளிக்கச் செய்வதாக உள்ளது. ஆயிரக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகஸ்ட் 15-க்கு பிறகு தோ்வு நடத்த ஏன் முனைகிறீா்கள். அதிலும் தேதி ஏதும் அறிவிக்கப்படவில்லை. நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும் என்று எதிா்பாா்க்கிறீா்கள். தோ்வு நடத்தப்பதுவது தொடா்பாக நீதிமன்றம் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று விரும்புகிறீா்களா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
விசாரணையின்போது யுஜிசி சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, யுஜிசி ஜூலை 6 மற்றும் 8-ஆம் தேதி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் இறுதியாண்டு மாணவா்களுக்கான தோ்வு நடைமுறைகளை செப்டம்பா் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், தோ்வுகள் இணையதளம், தோ்வுக்கூடம் அல்லது இரு முறைகளிலும் நடத்தப்பட முடியும் என்றும் தெரிவித்திருப்பதாக கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி
முதல்வர் ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை: ட்ரோன் பறக்க தடை

விஜய் போட்டியிடும் தொகுதிகளில் எதிா்கட்சியினா் டெபாசிட் இழப்பா்! - செங்கோட்டையன்

திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்! - பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

