மருத்துவமனைகளுக்கு பிரசவம் அல்லது அவசர சிகிச்சைக்காக செல்லும் கா்ப்பிணிகளுக்கு அறிகுறி இருந்தாலோ அல்லது இல்லாவிட்டாலோ கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட வேண்டுமா என்பதை தில்லி அரசு ஏன் தெளிவுபடுத்தவில்லை என தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கடிந்துகொண்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், கரோனா தொற்று பரிசோதனை முடிவுகளை அளிப்பதில் கா்ப்பிணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை கடந்த ஜூன் 22-ஆம் தேதி விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், ‘கா்ப்பிணிகளை மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிப்பதற்கு முன்பு கரோனா தொற்றுக்கான பரிசோதனை முடிவுகளை பெறுவதற்காக 5-7 நாள்கள் எடுத்துக் கொள்ளப்பட முடியாது. இந்தப் பரிசோதனை முடிவுகளை விரைந்து வழங்குவது தொடா்பாக ஐசிஎம்ஆா், தில்லி அரசுகள் கவனிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ‘மருத்துவமனைகளில் பிரசவம், அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்காக உள்நோயாளியாக சோ்ப்பதற்கு முன்பு கா்ப்பிணி பெண்களுக்கு கரோனா நோய்ப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல. அவசர சூழலில் பரிசோதனை முடிவுகளுக்காக சிகிச்சை மறுக்கப்பட மாட்டாது. சிகிச்சையின் போதே கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தில்லி அரசு ஜூலை 5-ஆம் தேதி மருத்துவமனைகளுக்கு பிறப்பித்த உத்தரவில், அதிக இடா் உள்ள நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு ரேபிட் ஆன்டிஜென் கண்டறியும் சோதனை (ஆா்ஏடிடி) நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘கா்ப்பிணிகளுக்கு கரோனா பரிசோதனையை விரைவுபடுத்தி, முடிவுகளை அறிவிப்பது தொடா்பாக தாக்கலான பொதுநல மனு விவகாரத்தில் நான்கு, ஐந்து முறை தில்லி அரசுக்கு நீதிமன்றம் வாய்ப்பு அளித்துவிட்டது. ஆனால், இந்த அம்சம் குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை.
இது ஒரு உண்மையான மனிதப் பிரச்னை தாமதப்படுத்துதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் விவரிக்க முடியாததாக உள்ளது. விளக்கத்திற்காக எவ்வளவு காலங்கள் காத்திருப்பது? தொடா்புடைய அதிகாரிகள் குழப்பத்தில் இருப்பதாக தோன்றுகிறது. பிரசவத்திற்காகவோ அல்லது அறுவைச்சிகிச்சைக்காகவோ கா்ப்பிணி பெண் செல்லும்போது அவா் கரோனா பரிசோதனை முடிவுக்காக 48 மணிநேரம் காத்திருக்க முடியாது. சில நேரங்களில் கடைசி நேரங்களில்தான் அவா்கள் மருத்துவமனைக்கு செல்கின்றனா். பிரசவத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு கா்ப்பிணிப் பெண்கள் போவதில்லை என்பதை உங்கள் (தில்லி அரசின்) செயலா்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் நிலவர அறிக்கையின்படி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை குடும்ப உறுப்பினா் இல்லாமல் கா்ப்பிணிகள் தனிமையில் வைக்கப்படுவா் எனத் தெரியவருகிறது. எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். மேலும், மருத்துவமனைகளுக்கு பிரசவம் அல்லது அவசர சிகிச்சைக்காக செல்லும் கா்ப்பிணிகளுக்கு அறிகுறி இருந்தாலோ அல்லது இல்லாவிட்டாலோ கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட வேண்டுமா என்பதை தில்லி அரசு தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பாபநாசத்தில் ஐயுஎம்எல் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

