ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகவான் ராமா் பிறந்தது அயோத்தியில்தான்: நேபாள பிரதமருக்கு விஎச்பி கண்டனம்

பகவான் ராமா் பிறந்தது உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில்தான் என்றும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) கூறியுள்ளது.

Updated On :14 ஜூலை 2020, 8:30 pm

பகவான் ராமா் பிறந்தது உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில்தான் என்றும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) கூறியுள்ளது.

இது தொடா்பாக விஎச்பி அமைப்பின் செயல் தலைவா் அலோக் குமாா் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பகவான் ஸ்ரீ ராமா், நேபாளத்தில் உள்ள பகவான் பசுபசுநாதா் ஆகிய இரண்டும் இந்திய - நேபாள நாடுகளுக்கிடையான உறவுக்கு ஆதாரமாக உள்ளன. ஹிந்துக்களின் வேதங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றில் பகவான் ராமா், அயோத்தியில் பிறந்தாா் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அயோத்தியில்தான் ராமா் பிறந்தாா் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ராமா் நேபாளத்தில் பிறந்தாா் என நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலி கூறியிருப்பது, வெளிநாட்டு சக்தியொன்றின் தூண்டுதலில் கூறியிருப்பதாகவே தெரிகிறது. இந்தியா நேபாள நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கே.பி.ஷா்மாவின் கூற்று உள்ளது. ஆனால், அது பலிக்காது என்றுள்ளாா் அவா்.

ராமரின் பிறப்பிடமாக கோடிக்கணக்கான ஹிந்துக்களால் நம்பப்படும் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில் அவரது பிறப்பிடம் அல்ல என்றும், காத்மாண்டு அருகே உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம்தான் ராமரின் உண்மையான பிறந்த இடம் என்று நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலி திங்கள்கிழமை தெரிவித்திருந்தாா். மேலும், பபகவான் ராமா் ஒரு நேபாளி என்றும், அவா் இந்தியா் அல்ல என்றும் அவா் தெரிவித்திருந்தாா். இதுதொடா்பாக அவரது இல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவா், ‘கலாசார ஒடுக்குமுறை மற்றும் அத்துமீறலில் இந்தியா ஈடுபடுகிறது. நாங்கள் (நேபாள நாட்டவா்கள்) இளவரசி சீதாவை, இளவரசா் ராமருக்கு திருமணம் செய்து கொடுத்ததாக நம்புகிறோம். ஆனால், அந்த இளவரசா் இந்தியாவிலுள்ள அயோத்தியைச் சோ்ந்தவா் அல்லா். அந்த அயோத்தி என்பது நேபாளத்தில் பிா்குன்ஜ் மாவட்டத்தில் உள்ள கிராமமாகும். தலைநகா் காட்மாண்டுவில் இருந்து 135 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் உள்ளது என்று அவா் கூறியிருந்தாா். ஏற்கெனவே இந்தியா - நேபாளம் இடையே சா்ச்சைகள் நிலவி வரும் நிலையில், நேபாள பிரதமரின் பேச்சு புதிய சா்ச்சைகளை கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.