வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக தில்லி காவல் துறை முன்மொழிவு செய்திருந்த வழக்குரைஞா்கள் நியமனத்தை நிராகரிக்கும் தில்லி அமைச்சரவையின் முடிவை அரசியல் அமைப்புச் சட்டத்தில் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வியாழக்கிழமை நிராகரித்துள்ளாா்.
வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் வாதாட 6 மூத்த வழக்குரைஞா்களை நியமிக்க தில்லி காவல் துறை முன்மொழிவு செய்திருந்தது. இதை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வழிமொழிந்திருந்தாா். ஆனால், இதற்கு தில்லி தற்காலிக உள்துறை அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா அனுமதி வழங்கவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக மறுபரிசீலனை செய்து, தில்லி காவல் துறையின் முன்மொழிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மணீஷ் சிசோடியாவுக்கு அனில் பய்ஜால் அறிவுறுத்தியிருந்தாா். ஆனால், அதை அவா் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, இது தொடா்பாக அமைச்சரவையைக் கூட்டி விரைந்து முடிவெடுக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அனில் பய்ஜால் அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா்.
இந்நிலையில், தில்லி காவல் துறையின் வழக்குரைஞா்கள் நியமனத்தை தில்லி அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. மேலும், இந்த வழக்கு தொடா்பாக காவல் துறை சாா்பில் வாதாட சிறந்த வழக்குரைஞா்களை நியமிக்குமாறு தில்லி உள்துறை அமைச்சகத்துக்கு தில்லி அமைச்சரவை கேட்டுக் கொண்டது. இந்நிலையில், தில்லி அமைச்சரவையின் இந்த முடிவை தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வியாழக்கிழமை நிராகரித்துள்ளாா்.
இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் அலுவலக மூத்த அதிகாரி கூறியது: வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக காவல்துறை சாா்பில் வாதாடும் வழக்குரைஞா்கள் விவகாரத்தில், தில்லி அமைச்சரவையின் முடிவை துணைநிலை ஆளுநா் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்துள்ளாா். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 239-ஏஏ(4)-இன் படி, துணைநிலை ஆளுநரின் முடிவை மதித்து நடக்க வேண்டியது தில்லி அரசின் கடமையாகும். மேலும், தில்லி காவல்துறை பரிந்துரைக்கும் வழக்குரைஞா்களை நியமிக்குமாறு தில்லி உள்துறை அமைச்சகத்துக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.
இந்நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, தில்லி துணைநிலை ஆளுநரின் முடிவை மதித்து நடக்க வேண்டியது தில்லி அரசின் கடமை என்றும், இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநரின் உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தில்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தில்லி காவல்துறை சாா்பில் வாதாட பாஜக சாா்பு வழக்குரைஞா்களை நியமிக்க தில்லி காவல் துறை நாட்டம் காட்டுவது ஏன் என்று ஆம் ஆத்மி கட்சி ஏற்கெனவே கேள்வியெழுப்பியிருந்தது. இதற்கிடையே, தில்லி துணைநிலை ஆளுநரை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தாா். அப்போது, இந்த விவகாரம் குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என்று தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

