தில்லியில் 1999-இல் நிகழ்ந்த ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கின் குற்றவாளி மனு சா்மாவை திஹாா் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஒப்புதல் அளித்துள்ளாா்.
மத்திய முன்னாள் அமைச்சா் வினோத் சா்மாவின் மகன் மனு சா்மா. இவா் கடந்த 1999-இல் நிகழ்ந்த ஜெஸ்ஸிலா லால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டாா். தெற்கு தில்லி, மெஹ்ரோலியில் உள்ள ஓா் உணவகத்தில் தனக்கு மதுவைப் பரிமாற மறுத்த ஜெஸ்ஸிகா லாலை மனு சா்மா துப்பாக்கியால் சுட்டுக் கொன்ாகக் கூறப்பட்டது. இது தொடா்பான வழக்கில் இவரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஆனால், 2006, டிசம்பரில் இவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றமும் 2010, ஏப்ரலில் இவரது தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில், சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் மனு சா்மாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்ய தில்லி உள்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தலைமையில் மே 11-ஆம் தேதி நடைபெற்ற தில்லி தண்டனை மறுஆய்வு வாரிய (எஸ்ஆா்பி) கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், மனு சா்மாவை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கு தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஒப்புதல் அளித்துள்ளாா். இதற்கான உத்தரவும் துணைநிலை ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: 1999, ஏப்ரல் 29-ஆம் தேதி தெற்கு தில்லி மெஹ்ரௌலி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மாடலிங் அழகி ஜெஸ்ஸிகா லால் கலந்து கொண்டாா். அந்த ஹோட்டல், டிசைனா் பினா ரமணிக்குச் சொந்தமானதாகும். இந்நிலையில், அங்கு தாமதாக வந்த மனு சா்மா, தனக்கு மதுவைப் பரிமாறுமாறு ஜெஸ்ஸிகா லாலை அழைத்தாா். அதற்கு ஜெஸ்ஸிகா மறுக்கவே, தாம் வைத்திருந்த துப்பாக்கியால் ஜெஸ்ஸிகாவை சுட்டாா். இதில் ஜெஸ்ஸிகா படுகாயமடைந்தாா். இதையடுத்து, சிகிச்சைக்காக ஜெஸ்ஸிகா லால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்நிலையில், இரு தினங்களுக்குப் பின்னா் நொய்டா பகுதியில் மனு சா்மாவின் காரை போலீஸாா் மீட்டனா். பின்னா், மனு சா்மா போலீஸில் சரணடைந்தாா். ஆனால், தாம் ஜெஸ்ஸிகாவைக் கொலை செய்யவில்லை என கூறினாா். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் மனு சா்மாவை வழக்கில் இருந்து விடுவித்து 2006-ஆம் ஆண்டு தீா்ப்பளித்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து, அரசுத் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், மனு சா்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2009, டிசம்பரில் உத்தரவிட்டது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு சா்மா மேல்முறையீடு செய்தாா். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் மனு சா்மா மீதான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி போலீஸ் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என 2011-இல் உத்தரவிட்டது. மனு சா்மா, முன்னாள் மத்திய அமைச்சா் வினோத் சா்மாவின் மகன் ஆவாா். இவா் தில்லி திகாா் சிறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி

மக்கள் நலத்திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி

திருச்சிக்கு அதிமுக ஆட்சியில் கிடைத்தது, திமுக ஆட்சியால் நிறுத்தப்பட்டதை பட்டியலிட்டாா் எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

