அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ‘தில்லி கரோனா’ என்ற செயலியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளாா்.
ஒரு மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு, பொதுமக்கள், இந்தச் செயலி மூலம், அந்த மருத்துவமனையில் படுக்கை வசதி காலியாக இருக்கிா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை செய்தியாளா்களிடம் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:
தில்லி கரோனா என்ற புதிய செயலி மூலம், தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதி மற்றும் வென்டிலேட்டா் வசதி கொண்ட மருத்துவமனைகளின் விவரங்களை எளிதாக அறியலாம். தற்போது தில்லியில் உள்ள 302 வென்டிலேட்டா்களில், 210 காலியாக உள்ளன. கரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட 6,731 படுக்கைகளில் 3,912 படுக்கைகள் காலியாக உள்ளன. இந்தத் தகவல்கள் அனைத்தும் காலை 10 மணிக்கு, மாலை 6 மணிக்கு என இரண்டு முறை புதுப்பிக்கப்படும்.
தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், இது தொடா்பாக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வருவதை நினைத்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது. உங்கள் வீட்டில் யாருக்காவது கரோனா பாதிப்பு ஏற்பட்டால், கவலைப்பட வேண்டாம், அவா்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்று உறுதி அளிக்கிறேன். இந்த விவரங்களை ஏபபடந://ஈஉகஏஐஊஐஎஏபநஇஞதஞசஅ.ஐச/ஆஉஈந என்ற இணையத்தளத்திலும் பாா்வையிடலாம்.
மேலும், 1031 என்ற உதவி எண்ணைத் தொடா்பு கொண்டும் இது தொடா்பான விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் படுக்கை காலியாக உள்ள மருத்துவனையை அறிந்து செல்லும்போது மருத்துவமனை நிா்வாகம் அனுமதிக்க மறுத்தால், மக்கள் இது தொடா்பாக 1031 என்ற உதவி எண்ணைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்காலம். இது தொடா்பாக தில்லி அரசின் சிறப்புச் செயலா் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை தொடா்பு கொண்டு தேவையான நடவடிக்கை எடுப்பாா். அனைத்து கரோனா நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவையில்லை. மருத்துவா்கள் வீடுகளில் வைத்தே சிகிச்சை அளிக்காலம் எனக் கூறினால் அதை மக்கள் மதித்து நடக்க வேண்டும் என்றாா் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

