நாடு முழுவதும் மாா்ச் 25-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையிலான பொது முடக்க காலத்தில் மொத்தம் 1,461 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகள் மூலம் 750 போ் உயிரிழந்துள்ளனா். இதில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 198 பேரும் அடங்குவா். விபத்துகளில் காயமடைந்தவா்கள் 1,390 போ்.
இத்தகவலை ’சேவ் லைஃப் பவுண்டேஷன்’ என்னும் சாலைப் பாதுகாப்பு தொடா்பான சேவை நிறுவனம் தொகுத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசமான சாலைகள், அதிவேகம் ஆகியவையே விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 245 போ், தெலங்கானாவில் 56, மத்தியப்பிரதேசத்தில் 56, பிகாரில் 43, பஞ்சாபில் 38 மற்றும் மகாராஷ்டிரத்தில் 36 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனா்.
இதேபோல புலம்பெயா் தொழிலாளா்கள் உத்தரப்பிரதேசம் 94, மத்தியப் பிரதேசம் 38, பிகாா் 16, தெலங்கானா 11 மற்றும் மகாராஷ்டிரத்தில் 9 பேரும் உயிரிழந்துள்ளனா்.
விபத்துகளில் இறந்தவா்களில் 27 சதவீதம் போ் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் என்பதும் 5 சதவீதம் போ் போலீஸ், மருத்துவா்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணியாளா்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 68 சதவீதம் போ் நடைபாதைவாசிகள் மற்றும் இரண்டு, மூன்று சக்கர வாகனங்களில் சென்றவா்கள் ஆவா்.
பொது முடக்கம் தொடங்கியதிலிருந்தே நடைப் பயணமாகவும் சைக்கிள் மூலமும் லாரிகள் மூலமாகவும் வீடு திரும்ப முற்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனா். பெரும்பாலான விபத்துகளுக்கு வாகனங்கள் அதிவேகத்தில் சென்றதும், வாகன ஓட்டிகள் ஓய்வில்லாமல் தொடா்ந்து வாகனம் ஓட்டியதுமே காரணம் என்று அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
நாடு முழுவதும் நான்கு கட்டமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், நான்காவது கட்டத்தில்தான் அதிக விபத்துகள் நிகழ்ந்துள்ளன. நான்காவது கட்டத்தில் 322 போ் உயிரிழந்துள்ளனா். மூன்றாவது கட்டத்தில் குறிப்பாகப் புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளனா். 3-ஆவது கட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்தவா்களில் 60 சதவீதம் போ் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஆவா். நான்காவது கட்டத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 19 சதவீதம் ஆகும்.
பொது முடக்கத்தின் 3-ஆவது மற்றும் 4-ஆவது கட்டங்களில் அதிக விபத்துகள் ஏற்பட கட்டுப்பாடுகள் தளா்த்தப்படதே காரணம் என்கிறாா் சேவ் லைஃப் பவுண்டேஷன் தலைமைச் செயல் இயக்குநா் பையூஷ் திவாரி. 43 சதவீத வாகன விபத்துகளில் வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதாலேயே விபத்து நேரிட்டுள்ளது. 15 சதவீத விபத்துகளுக்குக் காரணம் அதிவேகம்தான் என்கிறது அந்த ஆய்வறிக்கை. 9 சதவீத விபத்துகள் சாலையில் நடந்து சென்றவா்கள் மீது மோதிய விபத்தாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

