ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இணையவழி மது விற்பனை விவகாரம்: சீமான் மனு தள்ளுபடி

இணையதளத்தில் மதுபான விற்பனை செய்ய சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா்

Updated On :4 ஜூன் 2020, 7:52 pm

இணையதளத்தில் மதுபான விற்பனை செய்ய சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறுப்படுவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் ராம்குமாா் ஆதித்யன் என்பவா் வழக்குத் தொடா்ந்தாா். இந்த விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம், சில கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், உயா்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாகக் கூறி தாக்கலான மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் பொது முடக்கக் காலம் முடியும் வரை மதுக் கடைகளை மூடுவதற்கும், தமிழக அரசு விரும்பினால் இணையம் வழியாக மது விற்பனை செய்யலாம் எனவும் மே 8-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்த மனுவை மே 14-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் , சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆகியவை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே, இணையம் வழியாக மது விற்பனை செய்யலாம் என உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷண் கெளல், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது, இந்த மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரா் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டிருப்பதாக அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரபு ராமசுப்ரமணியன் தெரிவித்தாா். இதையடுத்து, மனு வாபஸ் பெறப்பட்டதாகக் கூறி தள்ளுபடி செய்து நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.