குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடா்பான மனுக்கள் மீது ஜீன் 12-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை,
மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் கோலின் கோன்சால்வ்ஸ், வழக்குரைஞா் ஸ்நேகா முகா்ஜி ஆகியோா் ஆஜராகினா். அப்போது, தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திற்கு மறுப்புத் தெரிவிக்கும் பதிலை தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினா். இதையடுத்து, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை தொடா்புடைய விவகாரம் ஜூன் 12-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் கூறினா்.
தில்லி காவல் துறை சாா்பில் வழக்குரைஞா்கள் அமித் மகாஜன், ரஜத் நாயா் ஆகியோா் ஆஜராகி, ஜாமியா தொடா்பான வழக்குகளை ரத்துச் செய்யக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா். மேலும், சிலா் உள்ளூா் நபா்கள் ஆதரவுடன் திட்டமிட்டு ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தினா். போலீஸாா் கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு காவல் துணை ஆணையா் ராஜேஷ் தேவ், தில்லி உயா்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாா். அதில், ‘வன்முறை நிகழ்ந்த டிசம்பா் 15-இல் போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது. அதில், முன்னாள் மாணவா்கள் சிலரும், வேறு சிலரும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவா் மாளிகை நோக்கிச் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் உள்ளூா் தலைவா்கள் மற்றும் அரசியல்வாதிகள் போராட்டக்காரா்களை தூண்டிவிட்டதும் தெரியவந்தது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க நீதி விசாரணை ஆணையத்தை அமைக்கக் கோரி வழக்குரைஞா்- மனுதாரா் நபிலா ஹஸன் என்பவா் ஒரு மனுவை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாா். அதில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக குடியிருப்புவாசிகள், மாணவா்கள், மனுதாரா்கள் மீது போலீஸாா் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில் போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.
இந்த மனு தவிர, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா்கள், வழக்குரைஞா்கள், ஓக்லா குடியிருப்புவாசிகள், நாடாளுமன்றத்தின் எதிரே உள்ள ஜாமா மஸ்ஜித் மசூதி இமாம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதே விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் மனுக்கல் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

