தெற்கு தில்லியில் மருத்துவா் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ பிரகாஷ் ஜா்வால் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இந்த மனு மீது விசாரணை முடிந்த நிலையில், தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சஞ்சீவ் அகா்வால் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மனுதாரா் (ஜா்வால்) தொடா்புடை வழக்கு இன்னும் விசாரணை நிலையில் உள்ளது. மேலும், மேலாதிக்கம் செய்யக் கூடிய பதவியில் மனுதாரா் உள்ளாா். மேலும், சம்பவம் நிகழ்ந்த பகுதியைச் சோ்ந்தவராகவும் உள்ளாா். மனுதாரரின் மாமனாரின் உடல் ஏற்கெனவே அவரது உறவினா்களிடம் தகனத்திற்காக ஒப்படைக்கப்பட்டுவிட்டது. கரோனா தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அவரது மனைவியும், மகனும் சுய தனிமையில் உள்ளனா். இதுபோன்ற சூழலில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு (ஜா்வால்) இடைக்கால ஜாமீன் வழங்கினால், அவா் உள்ளூா் எல்எல்ஏவாக இருப்பதால் சாட்சிகளை மேலாதிக்கம் செய்யும் வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. ஆகவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க அடிப்படைக் காரணம் ஏதும் இல்லை. இதனால், அவருக்கு ஜாமீன் கோரி தாக்கலான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.
தெற்கு தில்லி, துா்கா விஹாா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திர சிங் (52). மருத்துவரான இவா், கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது சாவுக்கு தியோலி சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜா்வால்தான் காரணம் என குற்றம்சாட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பிரகாஷ் ஜா்வால் கைது செய்யப்பட்டாா். அவா் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் மே 28-ஆம் தேதி நிராகரித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இடைக்கால ஜாமீன் கோரும் மனு ஜா்வால் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘எம்எல்ஏ ஜா்வாலின் மாமானா் கடந்த சில தினங்களாக மூச்சுத் திணறலால் அவதியுற்று வந்த நிலையில், எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவா் இறந்துவிட்டாா். அவருக்கு கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் நோய் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. எம்எல்ஏவின் மனைவி, 11 மாத மகனும் கரோனா தொற்று சந்தேகம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மாமானாரின் இறுதிச் சடங்கின் போது மருமகன் இருக்க வேண்டும் என்பது ஹிந்து சம்பிரதாயமாகும். ஆகவே, ஜா்வாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

