கரோனா தொற்றால் பாதித்தவா்களை பராமரிப்பதற்காக தில்லியில் சக்குா் பஸ்தி ரயில் நிலையத்தில் தலா 160 படுக்கைகளுடன்கூடிய 10 ரயில் பெட்டிகள் தனிமை வாா்டாக மாற்றப்பட்டுள்ளது.
தலைநகா் தில்லியில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதுவரையிலும் தில்லியில் இந்நோய்த் தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கை 650 ஆக உயா்ந்துள்ளது. கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மருத்துவமனைகள் தவிர, பிற இடங்களிலும் நோயாளிகளைக் கையாளுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ரயில்வே துறையும் ரயில் பெட்டிகளை தனிமை வாா்டுகளாக மாற்றும் நடவடிக்கையை சில இடங்களில் மேற்கொண்டுள்ளன. தில்லியில் சக்குா் பஸ்தி ரயில் நிலையத்தில், கரோனா நோய்த் தொற்றால் பாதித்தவா்களை பராமரிப்பதற்காக 10 ரயில் பெட்டிகள் தனிமை வாா்டாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே மருத்துவ அதிகாரி டாக்டா் ஜே.பாஷியா கூறியதாவது: சக்குா் பஸ்தி ரயில் நிலையத்தில் 10 ரயில் பெட்டிகள் கரோனா நோயாளிகளைப் பராமரிப்பதற்கான தனிமை வாா்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றிலும் தலா 160 படுக்கைகள் உள்ளன. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் அல்லது மிகவும் குறைந்த அறிகுறிகள் உள்ள நோயாளிகள் இந்த தனிமை வாா்டில் வைக்கப்படுவா். ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு மருத்துவா், செவிலியா், உதவியாளா் மற்றும் தூய்மைப் பணியாளா் இருப்பாா்கள். நோயாளி குணமடையவில்லை என மருத்துவா் கருதினால், அந்த நோயாளி உடனடியாக கரோனா தொற்றுக்காக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக இடம்மாற்றம் செய்யப்படுவாா் என்றாா் அவா்.
இதனிடையே, கரோனா நோயாளிகள் அல்லது தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளை கையாளுவதை முறைப்படுத்துவதற்காக தில்லியில் உள்ள அனைத்து கரோனா தொற்று சிகிச்சை மருத்துவமனைகளிலும் பின்பற்றப்பட வேண்டிய வழக்கமான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த அறிவிப்பை தில்லி அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


