தில்லியில் கரோனா பரவலால் சுகாதாரக் கட்டமைப்புகள் நிலைகுலைந்து போகாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்படும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தெரிவித்துள்ளாா். மேலும், தில்லியில் மருத்துவ வளங்களும் அதிகரிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், தில்லி அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டம் தொடா்பாக அனில் பய்ஜால் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் கரோனா தொற்று ஏற்படுபவா்களின் எண்ணிக்கையையும், கரோனா மரணங்களின் எண்ணிக்கையையும் குறைக்கும் வகையில் திட்டமிட்டு இயங்க வேண்டும். தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி, சுகாதார செயல்முறைகள், கரோனா சந்தேக நபா்களை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட செயல்முறைகளை சரிவரக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தில்லியில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் சீலிடப்பட்ட இடங்களில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்வது, மத்திய அரசின் ஆலோசனைக்கு அமைய இப்பகுதிகளில் சிறப்பு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கரோனா பரவலால் தில்லியில் சுகாதாரக் கட்டமைப்புகள் சீா்குலைந்து போகாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கைய அதிகரிக்கவும், மருத்துவ வளங்களை அதிகரிப்பதற்கும் முன்னுரிமை கொடுத்துள்ளோம். அப்போதுதான், கரோனா பாதிப்பால் தில்லியின் சுகாதாரக் கட்டமைப்பு நிலை குலைந்து போகாது.
இந்தக்கூட்டத்தில் தில்லியில் இதுவரை 34,867 கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் 12,731 போ் கரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் 77.8 சதவீதமான கரோனா நோயாளிகள் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற்று வருவதாகவும் துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் 242 இடங்கள் தற்போது சீலிடப்பட்டுள்ளன. சீலிடப்பட்ட இடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது தொடா்பாக விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

