சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தில்லி, என்சிஆரில் கடும் புழுக்கம்! மிதமான பிரிவில் காற்றின் தரம்

தலைநகா் தில்லி, என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

Updated On :15 ஜூன் 2020, 2:10 am

தலைநகா் தில்லி, என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

தில்லி, என்சிஆா் பகுதியில் கடந்த நான்கு தினங்களாக வெயில் அதிகரித்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை பரலாக மழை பெய்தது. சனிக்கிழமை மேக மூட்டமாக இருந்ததால் வெயிலின் தாக்கம் உணரப்படவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, புழுக்கம் காரணமாக மக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 28 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 39.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 70 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 63 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 27.2 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 42.2 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 27 டிகிரி செல்சியஸ், 38.2 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 62 சதவீதம், மாலையில் 44 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 65 சதவீதம் மற்றும் 60 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருந்தது. தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 136 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. திா்பூா், தில்லி பல்கலை. லோதி ரோடு, பூசா, மதுரா ரோடு, குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதேசமயம், ஆயாநகா், விமானநிலைய டொ்மினில் 3 பகுதியில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவிலும், சாந்தினி சௌக்கில் மிகவும் மோசம் பிரிவிலும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை தில்லி, என்சிஆா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடி, மின்னல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், வடமேற்கு திசையிலிருந்து சுமாா் 20 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசும் என்றும், காற்றின் தரம் முன்னேற்றம் அடைந்து ‘மிதமான’ பிரிவில் நீடிக்கும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.