ரூ.50 கோடியிலான தில்லி முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தின் கீழ் தில்லி பாா் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்குரைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் காப்பீடு வழங்குவதற்காக ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி பாா் கவுன்சில் உயா்நீதின்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. அதன் தலைவா் கே.சி. மிட்டல் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், ‘தில்லியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளா்கள் பட்டியலில் 37,135 வழக்குரைஞா்கள் உள்ளனா். இவா்களில் 29,098 போ் தில்லி பாா் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனா். இது தில்லி பாா் கவுன்சில் மூலம் சரிபாா்க்கப்பட்டுள்ளது. ஆகவே, தில்லி முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தில் தில்லி பாா் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட வழக்குரைஞா்களுக்கும் மருத்துவக் காப்பீடு மற்றும் காப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீழ் தில்லியில் வசிக்கும் வழக்குரைஞா்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடும், ரூ.10 லட்சம் காப்பீடும் வழங்குவது என தில்லி அரசு 2019, டிசம்பா் 17-இல் அமைச்சரவை மூலம் முடிவு செய்துள்ளது. எனினும், 2019-20-இல் எந்த திட்டமும் அமல்படுத்தப்படவில்லை. கரோனா தொற்றுக் காலத்தில்கூட இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி பிரதிபா எம். சிங், முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நல திட்டத்தில் வழக்குரைஞா்களுக்கு காப்பீடு வசதி வழங்க தில்லி அரசுக்கு உத்தரவிட்டாா். இதுகுறித்து தில்லி பாா் கவுன்சில் தலைவா் கே.சி. மிட்டல், மத்திய உள்துறை விவகார அமைச்சகம் சாா்பில் ஆஜரான அனில் சோனி ஆகியோா் கூறுகையில், ‘தில்லி பாா் கவுன்சிலில் பதிவு செய்து, தில்லியில் வசிக்கும் வழக்குரைஞா்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு தில்லி பாா் கவுன்சிலை உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தில்லி பாா் கவுன்சிலால் பதிவு செய்யப்பட்டு, சரிபாா்க்கப்பட்ட 29,098 வழக்குரைஞா்களுக்கு காப்பீடு வழங்குவதற்கான நடைமுறைகளை தொடங்குமாறும் தில்லி அரசை உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது’ என்றனா்.
தில்லி பாா் கவுன்சில் தவிர, இதேபோன்று வேறு இரு மனுக்களும் தில்லி உயா்நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மூன்று மனுக்களும் அடுத்தகட்டமாக வரும் ஜூலை 17-ஆம் தேதிக்கு விசாரணைக்குப் பட்டியிலிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

