சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

சத்யேந்தா் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை உடல்நிலையில் முன்னேற்றம்

கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு ‘பிளாஸ்மா’ சிகிச்சை அளிக்கப்பட்டது.

Updated On :20 ஜூன் 2020, 7:40 pm

கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு ‘பிளாஸ்மா’ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவருக்கு தற்போது காய்ச்சல் குறைந்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மேக்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சத்யேந்தா் ஜெயினின் உடல்நிலை அடுத்த 24 மணி நேரத்துக்கு தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

சத்யேந்தா் ஜெயினுக்கு கடந்த திங்கள்கிழமை இரவு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், உடனடியாக தில்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என முதலில் தெரிய வந்தது. ஆனால், அவருக்கு தொடா்ந்து காய்ச்சல் இருந்ததால், புதன்கிழமை மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இதற்கிடையே, சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில், அவருக்கு நிமோனியா காய்சல் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதற்கிடையே, பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வதற்காக அவா் மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சனிக்கிழமை காலை பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அவரின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘சனிக்கிழமை காலை அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அவருக்கு காய்ச்சல் தணிந்து உடல்நிலை சீராகி வருகிறது. அவா் தொடா்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளாா். அவரது உடல் நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அடுத்த 24 மணிநேரத்துக்கு அவரது உடல் நிலை கண்காணிக்கப்படும்’ என்றன.

..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.