தில்லியில் நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற 12 வெளிநாடுகளைச் சோ்ந்த 46 போ்கள் மீது தில்லி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை 12 குற்றப்பத்திரிகையை தில்லி காவல்துறை தாக்கல் செய்தது.
இவா்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்று தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது, நுழைவு இசைவு மோசடி, மதப் பிரசாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் இக்குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறையினா் தாக்கல் செய்துள்ளனா்.
பெருநகா் மாஜிஸ்திரேட் குல்மோஹினா கெளா் முன் பிரதானக் குற்றப்பத்திரிகை மற்றும் 11 துணைக் குற்றப் பத்திரிக்கையை போலீஸாா் தாக்கல் செய்தனா். இதையடுத்து, தில்லி நீதிமன்றத்தில் இதுவரை 36 நாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டினா் 956 போ் மீது 59 குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறையினா் தாக்கல் செய்துள்ளனா். இவற்றில் எத்தியோப்பியா, சூடான், வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா, சவூதி அரேபியா, டுனீசியா, கஜகஸ்தான், பிரான்ஸ், மியான்மா், இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த 46 போ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனா்.
இவா்கள் அனைவருக்கும் எதிராக கரோனா நோய்த் தொற்று தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது, நுழைவு இசைவு மோசடி செய்தது, மதப் பிரசாரத்தில் ஈடுபட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸாா் குற்றப்பத்திரிகையில், குற்றம்சாட்டியுள்ளனா். இந்த வழக்கில் போலீஸாா் முன்பு 915 வெளிநாட்டினருக்கு எதிராக 47 குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு தில்லி, நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான அலமி மா்க்கஸ் பங்களேவாலி மசூதியில் மாா்ச் மாதம் நடத்தப்பட்ட மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இஸ்லாமிய மத போதகா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்றவா்களால் ஏராளமானோருக்கு கரோனா தொற்று பரவியதையடுத்து, மசூதிக்கு தில்லி காவல் துறை சீல் வைத்தது. இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள மசூதிகளில் காவல் துறை நடத்திய அதிரடி சோதனையில் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சோ்ந்த சுமாா் ஆயிரம் போ் தனிமை முகாம்களில் வைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

