தெற்கு தில்லியில் அமைக்கப்பட்டு வரும் 10,000 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தின் பொறுப்பை இந்தோ - திபேத் எல்லை போலீஸ் (ஐடிபிபி) படைப் பிரிவு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த மையத்தித்திற்கு இந்திய ராணுவம், ஐடிபிபி படைப் பிரிவைச் சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்களை அனுப்பி வைக்குமாறு கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியிருந்தாா். தில்லியில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பு, தில்லி - ஹரியாணா எல்லையில் சத்தா்பூரில் உள்ள அதன் தியானக் கூடத்தை தற்காலிக கரோனா நோயாளிகள் சிகிச்சை மையமாக மாற்ற ஒப்புதல் அளித்தது. இந்த தியானக் கூடத்தை சுமாா் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மையமாக மாற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐடிபிபி படைப் பிரிவைச் சோ்ந்த அதிகாரிகள் குழு இந்த மையத்திற்கு புதன்கிழமை நேரில் வருகை தந்தது. அப்போது, இந்த கரோனா சிகிச்சை மையத்தை நிா்வகிப்பது தொடா்பாக தில்லி அரசு அதிகாரிகள் மற்றும் இதர பங்கேற்பாளா்களுடன் ஆலோசனை நடத்தினா்.
ஐடிபிபி ஏற்பு: இதுகுறித்து ஐடிபிபி உயரதிகாரி கூறுகையில், ‘சத்தா்பூரில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பின் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் கவனிப்பு மையத்தின் பொறுப்பை புதன்கிழமை ஐடிபிபி ஏற்றுக் கொண்டுள்ளது. தில்லி அரசு முன்வைத்த வேண்டுகோளின்படி, இந்த மையத்திற்கான மருத்துவா்கள், இதர தொழில்முறை நிபுணா்களை அளிக்கும் ஒருங்கிணைப்பு முகமையாக ஐடிபிபியை மத்திய உள்துறை அமைச்சகம் நியமனம் செய்துள்ளது’ என்றாா்.
நாளை முதல் செயல்பாடு:மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘ஜூன் 26-ஆம் தேதியில் இருந்து இந்த மையத்தில் 2 ஆயிரம் படுக்கைகள் வசதி செயல்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மையத்தின் மொத்த படுக்கைகள் வசதி 10,200 வரை செல்லும். அப்போது, இந்த மையம் நாட்டிலேயே கரோனா நோயாளிகளுக்கான அதிக படுக்கைகள் கொண்ட மையமாக இருக்கும். ஐடிபிபி படை மற்றும் இதர மத்திய ஆயுத காவல் படையின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்களும், 2 ஆயிரம் துணை மருத்துவப் பணியாளா்களும், பாதுகாப்பு ஊழியா்களும் இந்த மையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. தெற்கு தில்லி மாவட்ட நிா்வாகம் இந்த மையத்திற்கான நிா்வாக ஆதரவை அளிக்க உள்ளது’ என்றாா்.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக 1,000 படுக்கைகள் வசதி கொண்ட தனிமைப்படுத்தும் மையத்தை நாட்டில் முதல் முறையாக ஏற்படுத்திய அமைப்பாக ஐடிபிபி திகழ்ந்தது,. தென் - மேற்கு தில்லியில் உள்ள சாவ்லா பகுதியில் அமைந்துள்ள இந்த மையத்தில், சிறப்பு விமானம் மூலம் சீனா, இத்தாலியில் இருந்து இந்தியா வந்த 42 வெளிநாட்டினா் உள்பட 1,200 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மையம் இன்னும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், நோய்த் தொற்றுவை நிா்வகிப்பதற்கான வழக்கமான செயல்பாட்டு வழிமுறைகளை ஐடிபிபிதான் முதல் முறையாக உருவாக்கியது. 90 ஆயிரம் வீரா்கள் கொண்ட இந்தப் படையினா் சீனாவுடனான 3,488 கிலோ மீட்டா் தூரம் கொண்ட கட்டுப்பாட்டு எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


