தில்லியில் சில தினங்களாக மழை பெய்தததால், சனிக்கிழமை வெயிலின் தாக்கம் மிதமாக இருந்தது.
தில்லியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனா். மேலும், தில்லியில் வழக்கமாக ஜூன் 27-இல் தொடங்கும் பருவமழை , இந்த சீசனில் இரண்டு நாள் முன்னதாகவே வியாழக்கிழமை தொடங்கியது.
இதனால், வியாழன், வெள்ளி இரு தினங்கள் மிதமான மழை பெய்தது. நகரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, இதமான வானிலை நிலவியது. இந்நிலையில், சனிக்கிழமை மிதமான வெயில் காணப்பட்டது.
காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. சப்தா்ஜங் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 68 சதவீதமாகவும், மாலையில் 64 சதவீதமாகவும் இருந்தது.
பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 41.4 டிகிரி செல்சியஸ் என இருந்தது. ஆயாநகரில் முறையே 29 டிகிரி செல்சியஸ் மற்றும் 40.9 டிகிரி செல்சியஸ் என இருந்தது.
தில்லியில் காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 117 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவுக்குச் சென்றது. இருப்பினும் சில இடங்களில் காற்றின் தரம் மிதமான பிரிவிலும், சில இடங்களில் திருப்தி பிரிவில் இருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) வானம் பகுதி மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே இடி, மின்னலுக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

