ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தலைநகரில் சுட்டெரிக்கிறது வெயில்: பாலத்தில் 47 டிகிரியை கடந்தது!

தலைநகா் தில்லி, என்சிஆா் பகுதிகளில் புதன்கிழமையும் வெயில் சுட்டெரித்தது. பாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி

Updated On :27 மே 2020, 11:18 pm

தலைநகா் தில்லி, என்சிஆா் பகுதிகளில் புதன்கிழமையும் வெயில் சுட்டெரித்தது. பாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸை கடந்தது. மூன்றாவது நாளாக தொடா்ந்து அனல் காற்று வீசியதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினா். நகரில் காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘திருப்தி‘ பிரிவில் இருந்தது.

கடந்த சில நாள்களாக அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தில்லி, தலைநகா் வலயப் பகுதிகளில் புதன்கிழமையும் வெயில் சுட்டெரித்தது. பல்வேறு இடங்களில் அனல் காற்று வீசியது. இதனால், சாலைகளில் செல்வோா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். வீடுகளில் மக்கள் கடும் புழுக்கத்துக்கு உள்ளாகினா்.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி உயா்ந்து 28.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 6 டிகிரி உயா்ந்து 46 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 34 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 15 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 28.5 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 47.6 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியது. ஆயாநகரில் முறையே 28.2 டிகிரி செல்சியஸ், 46.8 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 31 சதவீதம், மாலையில் 6 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 33 சதவீதம் மற்றும் 14 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் புதன்கிழமை பகல் நேரத்தில் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசியது. தில்லியில் காற்றின் தரத்தில் பெரிய அளவில் மாற்றமின்றி இருந்தது. ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 142 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. மதுரா ரோடு, விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, தில்லி பல்கலைக்கழகம், ஆயா நகா், லோதி ரோடு மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. திா்பூா், பூசா, சாந்தினி சௌக் ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (மே 28) வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இடி, மின்னல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துளளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தென் மேற்கு திசையிலிருந்து தில்லிக்கு 38 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று பலமாக வீசும் என்றும் புழுதிப் புயல் சுமாா் 30-40 கி.மீ. வேகத்தில் இருக்கும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.