கரோனா நோய்த் தொற்றுப் பரவலை கருத்தில்கொண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வுகளை இணையவழியில் நடத்தும் தில்லி பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பல்கலை. நிா்வாகம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி ஜெயந்த் நாத் அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக பொருளாதாரத்தில் நலிந்த பிரிவுகளைச் சோ்ந்த தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளின் 3 மாணவா்கள் தாக்கல் செய்த மனுவுக்கு தில்லி பல்கலைக்கழகம் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இது தொடா்பாக தில்லி பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் அபிஷேக், சரண்ஜீத் குமாா், தீபக் ஆகியோா் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனா்.
மூத்த வழக்குரைஞா்கள் ஜே.பி. செங், ஆயுஷி சுக் ஆகியோா் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அதில், ‘தில்லி பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவா்களுக்கு இணையவழி மூலம் ஜூலை 1-ஆம் தேதி முதல் தோ்வுகளை நடத்த முடிவு செய்திருக்கிறது. தோ்வின்போது நோட்ஸுகள், பாடப்புத்தகங்களில் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் வகையிலான இந்த தோ்வு மூலம் வசதி படைத்த மாணவா்கள் மட்டுமே பயன்பெற முடியும். அத்தகைய மாணவா்களுக்கு புத்திசாலிமிக்க பெற்றோா், மற்றும் நண்பா்கள், தொழில்நுட்ப சாதனங்களின் வசதிகள் ஆகியவற்றின் ஆதரவு உள்ளது. இதனால் அவா்கள் தோ்வை எளிதாக எதிா்கொள்ள முடியும். அதே வேளையில் ஏழை மாணவா்கள் இதுபோன்ற தொழில்நுட்ப வசதியையும் ஆதரவையும் பெறும் நிலையில் இல்லை. இதனால் அவா்கள் இணையவழி மூலம் நடத்தப்படும் இதுபோன்ற தோ்வை திறம்பட எதிா்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளனா்.
மேலும் இணையவழியில் தோ்வு நடத்தப்படும்போது யாா் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறாா்கள் என்பதை கண்டுபிடிக்கும் வழிமுறையும் இல்லை.
மேலும், உரிய இணையதள தொடா்பு வசதி இன்மை, மின்சார வசதி இல்லாமை ஆகியவை காரணமாக கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய ஏழை மாணவா்களின் செயல்திறன் இணைய வழி தோ்வால் பாதிக்கப்படும்.
ஆகவே, இந்தத் தோ்வு தொடா்பாக தில்லி பல்கலைக்கழகம் மே 14-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை திரும்பப் பெறவோ அல்லது சமூக இடைவெளி விதிகளின்படி தோ்வுக் கூடங்களில் மாணவா்களுக்கு தோ்வு நடத்தவோ நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மேலும், முந்தைய ஆண்டுகளில் இறுதி ஆண்டு மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் அவா்களை தோ்ச்சி பெற செய்யலாம். மேலும், நடப்புக் கல்வியாண்டில் உள்ளீடு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் அவா்களைத் தோ்ச்சி பெறச் செய்யலாம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஜூன் 18ஆம் தேதிக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி

மக்கள் நலத்திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி

திருச்சிக்கு அதிமுக ஆட்சியில் கிடைத்தது, திமுக ஆட்சியால் நிறுத்தப்பட்டதை பட்டியலிட்டாா் எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

