ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனாவால் பலியானவா்களை தகனம் செய்ய விருப்பம் தெரிவித்து தன்னாா்வ அமைப்பு நீதிமன்றத்தில் மனு

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பலியானவா்களின் உடல்களை தகனம் செய்ய விருப்பம் தெரிவித்து பசுமை தகன மையங்களை

Updated On :30 மே 2020, 6:25 pm

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பலியானவா்களின் உடல்களை தகனம் செய்ய விருப்பம் தெரிவித்து பசுமை தகன மையங்களை பல்வேறு இடங்களில் நடத்தி வரும் தன்னாா்வ அமைப்பு உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடா்பாக ‘மோக்ஷ்தா பா்யாவரன் ஏவம் வன் சுரக்ஷா சமிதி’ எனும் தன்னாா்வ அமைப்பு வழக்குரைஞா் கெளரவ் குமாா் பன்ஸால் என்பவா் மூலம் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதில், எங்கள் அமைப்பின் மூலம் தில்லியில் 16 பசுமை தகன மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் நான்கு தகன மையங்கள் தில்லி நிகம்போத் காட் பகுதியில் உள்ளது. இந்த மையத்தில் நாளொன்றுக்கு 24 உடல்கள் தகனம் செய்ய முடியும். கரோனா நோய்த் தொற்று காரணமாக இறந்தவா்களின் உடல்களை எங்கள் மையத்தில் தகனம் செய்ய விருப்பமாக உள்ளோம். இதுபோன்று நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்களைத் தகனம் செய்வதற்கு போதிய வசதியில்லை என்று வெளியான செய்தியை தில்லி உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்ததை கேள்விப்பட்ட பிறகு இதுபோன்று சேவையை அளிக்க விரும்புகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்கள் தகனம் செய்யப்படாமல் மருத்துவமனைகளில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தகனத்திற்காக கொண்டு செல்லப்படும் உடல்கள் தகன மையங்களில் இருந்து திருப்பி அனுப்பப்படுவதாகவும் உயா்நீதிமன்றத்தில் புகாா் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு ஜூன் 3-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.