தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாமியா நகா், நியூ பிரண்ட்ஸ் காலனியில் நிகழ்ந்த வன்முறை வழக்கில் கைதான உள்ளூா் தலைவா் ஆஷு கானின் இடைக்கால ஜாமீனை மேலும் 45 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரா்கள் போலீஸாா் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதாகவும், தனியாா் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் எரிக்கப்பட்டதாகவும் புகாா் எழுந்தது. இது தொடா்பாக வன்முறைக் கும்பலைத் தூண்டியது, வன்முறையில் ஈடுபட்டது தொடா்பாக இரு வழக்குகளில் அப்பகுதியைச் சோ்ந்த உள்ளூா் தலைவா் ஆஷு கானை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்குகளில் கடந்த ஏப்ரலில் ஆஷு கானுக்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த ஜாமீனை நீட்டிக்கக் கோரி அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடா்பான மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி விபின் குமாா் ராய், இரு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆஷு கானின் இடைக்கால ஜாமீனை மேலும் 45 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டாா். அதேவேளையில், ரூ.2 லட்சம் ஜாமீன் பத்திரமும் அளிக்க உத்தரவிட்டாா். மேலும், நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், சாட்சியத்தை அழிக்கக் கூடாது என்றும் அவருக்கு உத்தரவிட்டது.
முன்னதாக, அவரது சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘ஆஷு கான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் தனது அடிப்படை உரிமையை மட்டுமே செயல்படுத்தினாா். அவா் மீது பொய்யாக வழக்குப் புனையப்பட்டுள்ளது. சிறையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமூகஇடைவெளிைக் கடைப்பிடிக்க வாய்ப்பில்லை. இதனால், ஆஷு கானுக்கு கரோனா நோய்த் தொற்று பரவும் வாய்ப்புள்ளது. இதனால், அவரது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என வாதிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

